கமல் 232 டைட்டில் இன்று மாலை அறிவிப்பு.. உலகநாயகனுடன் இணையும் லோகேஷ் - அனிருத்..
உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படம் கமல்ஹாசன் 232. லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் கமல்ஹாசன் வெளியிட்டார். ராஜ் கமல் இன்டர் நேஷனல் தயாரிக்கும் இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.இப்படம் பற்றிய டைட்டில் அறிவிப்பு பற்றி ராஜ் கமல் இனடர்நேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்ததாவது: உலக நாயகன் பத்மபூஷன் கமல்ஹாசனின் 66வது பிறந்த நாள் (நவம்பர் 7, 2020) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் மிகுந்த பெருமையுடன் வழங்கும் கமல்ஹாசனின் 'KH 232' படத்தின் பெயர் வெளியிடப்படுகிறது.
இந்த கொள்ளை நோய் காலத்திலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் குழுவினர் உலக நாயகனுடன் சேர்ந்து படத்தின் பெயர் வெளிவிடுவதற்கான டீஸரை உருவாக்கியுள்ளனர்.உலக நாயகனுடன் இணைந்து சிரமம் பாராமல் இப்படக் குழுவினர் உருவாக்கியுள்ள டீஸர் 7 நவம்பர் அன்று மாலை 5 மணிக்கு டீஸர் வெளியாகிறது. இந்த கோவிட்-19 காலத்தின் “புதிய இயல்பில்” படம் எடுப்பதற்குஅரசாங்கம் அறிவித்த அனைத்து வழிமுறைகளையும் ராஜ் கமல் தயாரிப்பு குழு சரியாகப் பின்பற்றும். மேலும் கூடுதல் தகவல்கள் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழங்கப்படும். உலகநாயகனுக்காக உங்களின் அன்பான வாழ்த்துகளை வேண்டுவதுடன் கமல்ஹாசன் 232. என்ற தலைப்பில் கொண்டாட அழைக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்று கமலின் பிறந்த நாளை அவரது தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்குக் கமல்232 பட டைட்டில் டீஸருடன் வெளியாகவுள்ளது. டைட்டில் வெளியானவுடன் அதை டிரெண்டிங் செய்ய ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.