ஹீரோவாக மாறி அந்தஸ்தை தக்க வைத்த காமெடியன்.. யார் அந்த நடிகர்..?

காமெடி நடிகர்கள் எல்லோருமே ஹீரோவாக நடித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் மீண்டும் காமெடி கதாபாத்திரத்துக்கே வந்திருக்கின்றனர். இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன், எலி என சில படங்களில் நடிகர் வடிவேலு ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு மீண்டும் இடைவெளி விட்டு காமெடி வேடத்தில் நடிக்க வந்தார்.இம்சை அரசன் படத்தின் 2ம் பாகம் உருவாக்க சிம்புதேவன் தயாரானதும் வடிவேலு நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தை ஷங்கர் தயாரித்தார்.

ஆனால் திடீர் பிரச்சனை காரணமாக அப்படத்திலிருந்து வடிவேலு விலகினார். இதுபற்றி ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். ஆனாலும் வடிவேலு அப்படத்தில் நடிக்க மறுத்தார். இப்பிரச்சினைக்குப் பிறகு வடிவேலு வேறு எந்த படத்திலும் நடிக்காமலிருக்கிறார். கமல்ஹாசன் தயாரித்து இயக்கவுள்ள தேவர் மகன் 2ம் பாகமான தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க உள்ளதாக ஒருமுறை தெரிவித்தார்.

ஆனால் அப்படம் தொடங்குவது பற்றி இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் இது போன்ற சர்ச்சைகள் எதிலும் சிக்காமல் சந்தானம் தந்து ஹீரோ அந்தஸ்த்தை தக்க வைத்து வருகிறார்.பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் சந்தானம். ஒரு கட்டத்துக்கு பிறகு ஹீரோவாக நடிக்க முடிவு செய்தார். அன்று முதல் ஹீரோவாகவே தனது பயணத்தை தொடர்கிறார்.வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் படத்தில் தொடங்கி இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, ஏ1, டகால்ட்டி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டார். இதில் சில படங்களை சந்தானமே சொந்தமாகத் தயாரித்தார். தற்போது 'டிக்கி லோனா' மற்றும் 'பிஸ்கோத்' படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் தயாரிப்புக்கு பிந்தைய பணிகள் நடக்கிறது.

சந்தானத்தின் 'பிஸ்கோத்' தற்போது எல்ல பணிகலும் முடிந்து சென்சார் போர்டில் இருந்து 'யு' சான்றிதழ் பெற்றது. படம் வெளியாக தயாராக உள்ளது. 'பிஸ்கோத்' ஒரு காமெடி கலந்த ருசிகரமான கதை அமைப்பு கொண் டது. மேலும் இதில் சந்தானம் பல்வேறு தோற்றங்களில் காணப்படுவார்.முன்னதாக, தயாரிப்பாளர்கள் படத்திலிருந்து முதல் ஒற்றை பாடல் 'பேபி ' ஐ வெளியிட்டனர், மேலும் இது இசை தளங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இப்போது, ​​நவம்பர் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன, தீபாவளியின் போது சந்தானத்தின் 'பிஸ்கோத்' திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மகிழ்ச்சியடைய தேவையான அனைத்து அம்சங்களும் இருப்பதால் இது நிச்சயமாகப் பார்வையாளர்களைத் திரையரங்குகளுக்கு கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

இப்படத்தில் தனது பாத்திரத்திற்காக வாள் சண்டைப் பயிற்சி பெற்றார் சந்தானம். ஆர் கண்ணன் 'பிஸ்கோத்' படத்தை இயக்கி தயாரித்துள்ளார், இப்படத்தில் சந்தானம், தாரா அலிஷா, சவுக்கார் ஜானகி, ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், சுவாதி முப்பாலா, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக ராதன் இசை அமைத்துள்ளார், ஒளிப்பதிவைச் சண்முக சுந்தரம் கையாண்டிருக்கிறார்.

More News >>