தமிழில் நடித்த பிரபல நடிகர் கடற்கரையில் நிர்வாண ஓட்டம்.. போலீசார் வழக்கு பதிவு..
பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன்,தமிழில் வித்தகன், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சர்ச்சைக்குப் பெயர் போன நடிகைகள் போல் இவர் சர்ச்சைக்குப் பெயர் பெற்ற நடிகர். சமீபத்தில் இவர் தனது 55வது பிறந்தநாள் கொண்டாட்டமாகக் கோவா சென்றார். கோவா கடற்கரை பகுதிக்குச் சென்றவுடன் ஆடைகளைக் கலைந்து முழு நிர்வாணமாக ஆனார். திடீரென்று அவர் கடற்கரையோரமாக வேகமாக ஓடினார். இதை அருகில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவரது மனைவி அங்கிதா கொன்வார் கணவர் நிர்வாணமாக ஓடுவதைப் புகைப்படம் எடுத்தார்.
பிறகு அந்த படத்தை நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பலரால் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. பொது இடத்தில் மிலிந்த் ஆபாசமாக ஓடியது சட்டப்படி குற்றம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்யப்பட்டது. கோவா சுரக்ஷா மன்ச் என்ற அரசியல் அமைப்பு மிலிந்தின் ஆபாசத்திற்கு எதிராக போலீசில் புகார் அளித்தது.
புகாரின் பேரில், மிலிந்த் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஐபிசி பிரிவு 294 இன் கீழ் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார் மிலிந்த். இது ஒரு பொது இடத்தில் ஆபாசமான செயலை குறிக்கிறது. அவர் தனது சமூக ஊடக பக்கங்களில் படத்தை வெளியிட்டதிலிருந்து அவர் ஐ.டி சட்டத்தின் ஒரு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மிலிந்தை போலீசார் கைது செய்வார்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே கவர்ச்சி நடிகைபூனம் பாண்டே மீது கோவா போலீசார் இதே போன்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர் நிர்வாணமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.வடக்கு கோவாவில் ஒரு கடற்கரை ரிசார்ட்டில் தங்கியிருந்த பூனம் பாண்டேவைக் காலாங்குட் காவல் துறையினர் கைது செய்தனர்.
பூனம் பாண்டே மீது ஐபிசி 294 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.முன்னதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் கேனாகோனா மாவட்டத்தில் இருக்கும் சபோலி அணையில் பூனம் பாண்டே எடுத்த ஆபாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாயின. இதை அனுமதித்த காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய புகைப்படம் எடுக்க அனுமதி அளித்த காவல்துறை ஆய்வாளர் துகாராம் சாவன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.