வாலிபரின் உயிரைப் பறித்த லேகியம் - உடல் எடையை குறைக்க போய் விபரீதம்
உடல் எடையைக் குறைப்பதற்காக தினமும் லேகியம் வாங்கி சாப்பிட்ட வாலிபர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆவடியை அடுத்துள்ள அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (28). இவர் அப்பகுதியில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது உடல் பருமனாக இருந்ததால், உடல் எடையை குறைப்பதற்காக வீட்டின் அருகில் உள்ள ஒரு கடையில் லேகியம் வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை அன்று வருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரதீப் சிகிச்சைக்கான சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
பிரதீப் லேகியம் சாப்பிட்டதாலேயே இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருமுல்லைவாயில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதீப் உடலை பிரேத பரிசோதனை செய்து டாக்டர்கள் அறிக்கை அளித்த பிறகே அவரது மரணத்திற்கான முழு விவரம் தெரியவரும். இதற்கிடையில், பிரதீப் இறந்தது பற்றி தகவல் கிடைத்ததும் லேகியம் விற்ற நபர் தலைமறைவாகிவிட்டார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com