உங்கள் வியூகங்கள் கோலியிடம் எடுபடாது... ஆஸ்திரேலியாவை எச்சரித்த ஸ்டீவ் வாஹ்!
ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தப் போட்டிகளுக்கு இப்போது இருந்தே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் பேசியுள்ளார்.
அதில், ஆஸ்திரேலியாவின் வழக்கமான ஸ்லெட்ஜிங் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் பேசுகையில், `` கோலி ஒரு மாஸ்டர் கிளாஸ் பேட்ஸ்மேன். அவர் போன்ற பேட்ஸ்மேன்களிடம் ஸ்லெட்ஜ் செய்யாமல் அமைதியாக இருப்பதே நல்லது. அவரிடம் வாய் கொடுத்து வம்பிழுக்க வேண்டாம். தவறி, வார்த்தை போரில் ஈடுபட்டால் , உங்கள் வார்ததைகள் கோலியை மேலும் மேலும் உத்வேகமாக விளையாட வைக்கும். அதனால் கோலியை பக்குவமாக கையாளங்கள். உங்களின் வழக்கமான ஸ்லெட்ஜிங் வியூகங்கள் கோலியிடம் எடுபடாது" எச்சரித்துள்ளார். கடந்த ஆஸ்திரேலிய டூரின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் கோலியை வம்பிழுக்க அந்த தொடர்பில் கோலி அதிக ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.