ஹீரோயின்கள் மொழி கற்க வாத்தியார்கள் நியமனம்.. இயக்குனர் ஏற்பாடு..
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலியின் அடுத்த பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது 'ஆர்.ஆர்.ஆர்'. இந்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், ஸ்ரேயா மற்றும் பல நட்சத்திர நடிகர்களுடன் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. ஒரிஜினலாக ஆர்.ஆர்.ஆர் படம் தெலுங்கில் உருவாகிறது. மற்ற மொழிகளும் இப்படம் வெளியாக உள்ளதால் சில முக்கிய காட்சிகள் தமிழ், இந்தி, மலையாள மொழிகளில் உருவாக்கப்படுகிறது. இயற்கையாகவே இதுவொரு தெலுங்கு படம் என்பதால், முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் தெலுங்கில் தங்கள் பாத்திரங்களுக்கான வசனங்களை சிரமமின்றி பேசுகின்றனர்.ஆனால் பிற மொழி நடிகர், நடிகைகள் வசனம் பேச முடியாமல் தடுமாறுகின்றனர்.
இந்தி நடிகை ஆலியா பட் மற்றும் வெளிநாட்டு நடிகை ஒலிவியா மோரிஸைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் பாத்திரங்களை டப்பிங் செய்வது கடினம். வசனம் பேசுவதுடன் அதற்கேற்ப முகபாவங்களும் காட்ட வேண்டி இருக்கும். எனவே ஓவ்வொருவருக்கும் தனித்தனி வாத்தியார்களை இயக்குனர் நியமித்திருக்கிறார், வசன உச்சரிப்புகளில் மாறு பாடு இருந்தால் அது சில சமயம் தவறான அர்த்தம் தருவதாகிவிடும் என்பதால் வசன உச்சரிப்பில் இயக்குனர் மிகுந்த கவனமாக இருக்கிறார். மொழியின் பண்பேற்றத்தை அவர்கள் விரைவாகப் பெறுவதற்காக இயக்குனர் சிறப்பு கவனம் செலுத்துகிறார். ஆந்திராவின் புகழ்பெற்ற சுதந்திர போராளிகளான கோமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராமராஜு ஆகியோரின் கதையாக இது அமைக்கப்படிருக்கிறது. ஆனால் இது கற்பனை கதை, தேசபக்தி படமல்ல என்று இயக்குனர் ராஜமவுலி கூறி உள்ளார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன் இப்படத்தின் டீஸர் வெளியானது. அதில் கோமராம் பீம் ஆக நடிக்கும் ஜூனியர் என்டிஆர் முஸ்ஸிம் தொப்பி அணிந்திருந்த காட்சி இடம் பெற்றது. அதற்கு ஆதிவாசிகள் மற்றும் பா ஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜமவுலியை தாக்குவேன் என்று தெலங்கானா பா ஜ தலைவர் எச்சரித்தார். மேலும் படம் வெளியாகும் தியேட்டர்கள் எரிக்கப்படும் யார் எரித்ததென்று தெரியாது என கூறினார். ராஜமவுலி பற்றி பேசிய பாஜ தலைவருக்கு திரையுலகினர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிபிற்காக வரவிருந்த அலிபாட்டின் வருகையும் தள்ளி வைக்கப்பட்டது.