தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவு...

கடந்த மூன்றாண்டுகளில் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 150 விசைப் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்தது. நல்லெண்ண அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை விடுதலை செய்ய இலங்கை அரசு சம்மதித்தது. இதைத்தொடர்ந்து அந்த படகுகளை மீட்க தமிழகத்திலிருந்து மீனவர்கள் சிலர் இலங்கை சென்றனர். ஆனால் அங்கு முப்பது விசைப்படகில் மட்டுமே நல்ல நிலைமையில் இருந்தன. மற்ற படகுகளை மீட்க முடியாத நிலையில் சேதமடைந்து காணப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் இலங்கைக்கு செல்ல முடியாத சூழல் இருப்பதால் 121 படகுகளை அழிக்க இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் உத்தவிட்டுள்ளது. இலங்கை நீதிமன்றங்களின் இந்த உத்தரவு தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு விசைப்படகின் மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய். தங்களது வாழ்வாதாரமே இந்த விசைப்படகுகள் தான் மேலும் பல மீனவர்கள் இதற்காக கடன் வாங்கி இந்த விசைப்படகுகளை இயக்கி வந்தனர் அப்படிப்பட்ட நிலையில் அதை அடியோடு அழிப்பது தங்களுக்கு பேரிழப்பாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவது, கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது போன்ற சம்பவங்கள் பல வருடங்களாகவே நடந்து வரும் நிலையில் இப்போது பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை அடியோடு அழிப்பது மீனவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

More News >>