திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட் : மேலும் ஒரு விடுதியில் கவுண்டர் திறப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம் ஆகிய விடுதிகளில் இலவச தரிசன படிக்கட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று பரவலால் விஷ்ணு நிவாசம், சீனிவாசம் ஆகிய விடுதிகளில் உள்ள டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கு விடுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சில் மட்டுமே இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. என் காரணமாக தூக்கத்தில் 3,000 பேருக்கு வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட் தற்போது 6 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வருகை அதிகரித்ததை அடுத்து திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் விடுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இலவச தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

More News >>