ஒயின் கிளாஸை உதட்டில் சுவைத்து தத்துவம் பேசும் சர்ச்சை நடிகை..
தமிழில் தேரோடும் விதியிலே என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை பாயல் கோஷ். இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் பாலிவுட் இயக்குனரும், இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவருமான அனுராக் காஷ்யப் மீது பாலியல் பாலாத்கார தொல்லை தந்ததாக போலீசில் புகார் கூறினார். அதில், பட வாய்ப்பு தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்தார். அங்கு சென்றபோது பலவந்தபடுத்த முயன்றார். அவரை தள்ளி விட்டுவிட்டு தப்பி வந்தேன் என்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அனுராகிற்கு ஆதரவாக நடிகை ராதிகா ஆப்தே முதல் சில நடிகைகள் குரல் கொடுத்தனர். அனுராக்கும் பாயல் தன் மீது பாலியல் புகார் கூறுவது பொய்யானது.
அவர் சொல்லும் நாளில் இலங்கையில் படப்பிடிப்பில் இருந்தேன் என்றார். நடிகை பாயல் தற்போது அரசியல் கட்சியில் சேர்ந்திருக்கிறார். குடியரசு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அக்கட்சியில் அவருக்கு மகளிர் அணி துணை தலைவர் பதவி தரப்பட்டுள்ளது. கட்சியில் சேர்ந்த பிறகு பாயல் கோஷின் பேச்சு தொணியே மாறி இருக்கிறது. ஆண் பெண் சமத்துவம் பற்றி பேசத் தொடங்கி இருக்கிறார். தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் கையில் ஒயின் கிளாஸ் வைத்துக்கொண்டு அதை உதட்டில் சுவைத்தபடி, சமத்துவம் என்ற பேச்சு வெறும் பேச்சாகத்தான் உள்ளது. ஆணுக்கு ஒன்று பெண்ணுக்கு ஒன்று பேதம் பார்க்கப்படுகிறது.
சம உரிமை பெற இன்னும் நீண்ட தூரம் நாம் செல்ல வேண்டி உள்ளது. வாழும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அதோடு சுதந்திரமாக வாழும் உரிமையும் உள்ளது. எனக்கு பிடித்தால் குடிக்கலாம் புகை பிடிக்கலாம், ஏன்? எனக்கு பிடித்தமான குட்டை பாவாடை கூட அணியலாம். ஆண்களைப் போல் கவலை இல்லாமல் வாழலாம்... இப்படி பாயல் தத்துவமாக உதிர்த்திருக்கிறார். கையில் ஒயின் கிளாஸ் பிடித்தவுடனே தத்துவம் தன்னால் வந்துவிடுமோ என்று நெட்டிஸன்கள் கமெண்ட் பகிர்ந்திருக்கின்றனர்.