விதியை மீறிய பாகிஸ்தான் பந்து வீச்சாளர்?

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகமே பொது முடக்கத்துக்கு உள்ளானது. இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு மக்கள் மெதுவாக திரும்புகின்றனர். ஆனாலும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் மக்களின் வாழ்வு முறையில் சமூக வலைதளங்கள், தொலைகாட்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் மட்டுமே மக்களுக்கான நம்பிக்கையூட்டும் அங்கமாக உள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் இந்த பெருந்தொற்றின் காரணமாக இந்தாண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் ஜிம்பாபே அணியுடன் நடைபெற்ற வருகிறது. மூன்று போட்டிகளிலை கொண்ட ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணி 2 வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றியது. பின்னர் இருபது ஓவர் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் இருபது ஓவர் போட்டியில் முதலில் பந்து வீசிய பாகிஸ்தான் அணி எதிரணியை 157 ரன்களுக்குள் சுருட்டியது. பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் அதிரடியால் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் பாதியில் 11 வது ஓவரை வஹாப் ரியாஸ் பந்து வீசினார். இந்நிலையில் அவர் எதிர்பாராத விதமாக பந்தை ஸ்விங் செய்வதற்காக பந்தில் எச்சில் தடவினார்.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் பெருந்தொற்றின் காரணமாக பந்தை ஷைன் செய்வதற்கு எச்சில் பயன்படுத்துவதற்கு தடை விதித்திருந்தது. ஆனால் இந்த தவறை செய்த ரியாஸ் கள நடுவரிடம் இருந்து எச்சரிக்கப்பட்டார். இந்த மாதிரியான தவறு நடப்பது பாகிஸ்தான் அணிக்கு இது இரண்டாவது முறையாகும்‌. கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் இது தவறுக்கு எச்சரிக்க பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தவறை இழைக்கும் வீரர்கள் மூன்று முறை எச்சரிக்கப்படுவர். நான்காவது முறை இது தவறை செய்யும் போது நான்கு ரன்கள் எதிரணியினருக்கு வழங்கப்படும்.

More News >>