இயக்குனர் ஆகும் பாப்புலர் நடிகர்..
நடிகர்கள் இயக்குனர் ஆகும் பட்டியல் போட்டால் நீண்டு கொண்டே போகும். கமல்ஹாசன், கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், அர்ஜூன், சிம்பு, விஷால், மனோஜ்.. இப்படி நீள்கிறது. பிற மொழிகளில் ஹீரோக்கள் அதிகமாக இயக்குனர் ஆகும் எண்ணம் கொண்டிருப் பதில்லை. ஆனால் ஒரு சிலர் அதையும் ஒரு கை பார்க்க வேண்டும் என்று எண்ணுபவர்களும் உள்ளனர். தமிழில் சிங்கம் பட இந்தி ரீமேக்கில் நடித்தவர் இந்தி நடிகர் அஜய் தேவ்கன். பல இந்தி படங்களில் நடித்துள்ளார். தற்போது ராஜமவுலி தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் நடிக்கிறார். அஜய் தேவ்கனுக்கு இயக்குனர் ஆசை வந்திருக்கிறது.
மே டே என்ற படத்தை இயக்கி நடிக்கிறார் அஜய் தேவ்கன். இதில் அவர் விமான பைலட்டாக நடிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் பற்றி இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அஜய்தேவ்கனே தயாரிக்கும் இப்படம் வரும் டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்கிடையில் அஜய் தேவ்கன் தான் நடித்து வரும் புஹுஜ் படத்தையும், அமிதாப்பச்சன் டிவி நிகழ்ச்சியையும் முடிக்க உள்ளனர். அஜய்தேவ்கன் இந்தி நடிகை கஜோல் கணவர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அஜய் தேவ்கனும் க்ஜோலும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். அஜய் பஞ்சாப் மாநிலம் அமிர்த்சர் ஊரை சேர்ந்தவர்.
இவரது தந்தை வீரு தேவ்கன் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தவர் மற்றும் ஆக்ஷன் படங்களும் இயக்கி உள்ளார். தாய் வீணா சினிமா தயாரிப்பாளர். அஜ்ய் தேவ்கன் மனைவி கஜோல் சிறந்த நடிகை ஆனால் குறைவான படங்களிலேயே நடிக்க ஒப்புக்கொண்டார். தமிழில் மின்சார கனவு படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்தார். அதன்பிறகு நீண்ட வருடங்கள் கழித்த கடந்த 2 ஆண்டுக்கு முன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் தனுஷுடன் போட்டி தொழில் அதிபராக நடித்தார்.