ஆண்டவரின் பிறந்தநாள் சர்ப்ரைஸ்.. பாலாஜியை டார்கெட் செய்த கமல்.. பிக் பாஸின் வெற்றிகரமான 35வது நாள்..
உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள். ஹாப்பி பர்த்டே கமல் சார். ஏற்கனவே கண்டன் இல்லாம தவிச்சுட்டு இருந்த பிக்பாஸ் டீமுக்கு ஆண்டவர் பிறந்தநாள் தொக்கா கிடைச்ச உடனே, அதையே கண்டண்டா மாத்திட்டாங்க. நேத்து கமல் சார் பர்த்டே ஸ்பெஷல் நிகழ்ச்சி தான். கூடவே கொஞ்சமா பிக்பாஸ் நிகழ்வுகள்.
ஆண்டவரோட வருகை அட்டகாசமா இருந்தது. ஆனாலும் அவர் முகத்துல ஒரு சோர்வு தெரிஞ்சுது. அவருடைய வயசுக்கு தேவையான ஓய்வில்லாமல் இன்னும் இன்னும் என்று உழைத்துக் கொண்டிருக்கிறார். இன்று உழைக்கும் வயதில் இருப்பவர்களுக்கு கமல் ஒரு பாடம்.
ட்ரீட் கேட்ட பிக்பாஸிடம் “I treat everyone equally and respectfully” என்று டைமிங்கில் அடித்தார். ஹவுஸ்மேட்ஸ் செஞ்சு கொடுத்த கேக் வெளிய வந்தது. நீண்ட நேரம் பார்த்த பின்னாடி தாந்தெரிஞ்சுது, நேத்து கொஞ்சம் உணர்ச்சி வசபட்டு இருந்தார் கமல் சார்.
அவரோட பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தான் வரிசையா...
ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் சேர்ந்து ஆஜித் தலைமையில கமல் சாருக்கு பாட்டு பாடி பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னாங்க. இந்த சீசனோட உருப்படியான ஒரு சீன்.
பிரேக்ல நமக்கு வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்.
கன்னித்தீவு பொண்ணா பாடலுக்கு டான்ஸ் ஆட வந்தா வெளில நல்ல மழை பேஞ்சுட்டு இருந்தது. இல்லேன்னா நல்லா டான்ஸ் ஆடிருப்பாங்க. தெரியும்ல.
ஹவுஸ்மேட்ஸ் சார் பர்த்டேக்கு கேக் செஞ்சது தான் அன்னிக்கு நாள் முழுக்க நடந்தது போலருக்கு லேயர் லேயரா கேக் செஞ்சுட்டு இருந்தாங்க.
என்னடா ஒன்னுமே நடக்கலையேனு யோசிச்சுட்டு இருக்கும்போது நைட் 1 மணிக்கு ஆரி ப்ரோ நடத்திட்டு இருந்தார்.
அந்த டைம்ல ஆரி, கேப்பி, ஷிவானி 3 பேரும் கையில ஆளுக்கொரு துடைப்பத்தை வச்சுட்டு பேசிட்டு இருந்தாங்க. க்ளீனிங்ல ஏதோ பஞ்சாயத்து போலருக்கு. அந்த நேரத்துலேயும் மாரல் கிளாஸ் எடுத்துட்டு இருந்தார் ஆரி. அதுவும் ஹை டெசிபில்ல பேசிட்டு இருந்தார். சிவானி. கேப்பி ரெண்டு பேரும் தன்மையா பதில் சொல்லிட்டு இருந்தாங்க. "கத்தி பேசாதீங்க ப்ரோ"னு சொன்ன கேப்பிக்கு அந்த வார்த்தைகள் வரும் வாரத்துல சில பிரச்சினைகள் கொடுக்கும்னு நினைக்கிறேன். கத்தி பேசினா நாம பேசறது சரினு ஆரியோட ஆழ்மனசுல போய் யாரோ நம்ப வச்சுருக்காங்க. அடுத்த வாரம் நிறைய சம்பவம் இருக்கு.
பேசறதை கொஞ்சம் தன்மையா பேசலாம். அது தான் ப்ரெண்ட்லினெஸ். எப்பவும் எரிஞ்சு விழஆ மாதிரியே பேசினா அதுவே நம்மோட பிராண்ட் ஆகிடும். இந்த கேப்ல யாரை எப்படி பிராண்ட் செய்யலாம்னு காத்துகிட்டு இருக்கும் போது, இவரே பாயிண்ட் எடுத்து கொடுக்கறாரு. சத்தமா பேசறது ஆரியோட குணம்னு கூட வச்சுக்குவோம். ஆனா அவர் பேசும் போது, தான் மட்டும் தான் சரி, மத்தவங்க எல்லாரும் தப்புனு போட்ரே ஆகுது. அதை யாருமே விரும்ப மாட்டாங்க.
மீண்டும் ஆண்டவர் பிறந்த நாள் கொண்டாட்டம். தெலுங்கு பிக்பாஸ் செட்ல இருந்து நாகார்ஜுனா பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னாரு. கூடவே எவிக்சன்ல இருந்து ஒருத்தரை காப்பாத்தற வேலையும் கொடுத்தார்.
அடுத்து கமல் + லோகேஷ் + அனிருத் இணையும் " விக்ரம்" படத்தோட டைட்டில் ரிலீஸ். லோகேஷும் அனிருத்தும் மேடைக்கு வந்துட்டு போனாங்க. மூன்றாவது, நான்காவது தலைமுறையினர் உடன் வேலை செய்யும் அளவுக்கு இன்றளவும் தகுதியோட இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார் கமல். ஹவுஸ்மேட்ஸ்க்கு டைட்டில் டீசர் போட்டு காண்பிக்கப்பட்டது. விசில் அடிச்சு கொண்டாடினாங்க.
கமல் சார் பேமிலி வந்து பர்த்டே விஷ் பண்ணினாங்க. அடுத்து ஸ்ருதியும், அக்ஷராவும் பர்த்டே விஷ் பண்ணினாங்க. ஒரு. வழியா பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிந்து நிகழ்ச்சிக்கு வந்தார்.
போட்ட சந்டைக்கு பதில் சொல்லனும் இல்லனு சன்ம் கிட்ட இருந்தே ஆரம்பிச்சாரு. பாலா சனம் சண்டை நடந்த போது இவங்களுக்கு வேற வேலையே இல்லப்பானு தான் எல்லாரும் நினைச்சோம். அது முடிவே இல்லாத ஒரு நிலைக்கு போய் அசிங்கமா முடிஞ்ச போது தான் எல்லார்க்குமே இது சீரியஸ்னு தோணுச்சு. பாலா யூஸ் செஞ்ச வார்த்தை தவறானது. அதுல யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. முதல் தடவை அவர் சொன்னது நான் ஜாலிக்காக சொன்னேன் என்பது தான் பாலாவோட வாதம். ஆனா பாலா அதோட நிறுத்திருந்தா பிரச்ச்னையே இல்ல. மறுபடியும் உள்ள போய் திட்டிநதால தான் அவரோட அந்த வாதமும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலைக்கு போய்டுச்சு.
உடையலங்காரம், சிகையலங்காரம் மாதிரி சபையலங்காரமும் தேவைனு வலியுறுத்தி சொன்னாரு கமல் சார். ரொம்ப நேரமா அந்த வார்த்தையை சொல்லாம பேசி முடிக்கனும்னு முயற்சி பண்ணிடல்ட்டு இருக்கும் போது, சனம் தன்னோட வாதத்துல அதை போட்டு உடைச்சுட்டாங்க. பின்னாடி அதை கமல் சாரும் சொல்லிக்காட்டி தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.
சின்ன வயசுல இருந்த கேட்ட வார்த்தை, ப்ரெண்ட்ஸ், பேமிலி சைட்ல கேட்ட வார்த்தை. அதனால எனக்கு தப்பா தெரியல சார்னு பாலா சொன்னது(முதல் தடவை சொன்னது) தப்பிச்சுக்கறதுக்கான ஸ்ட்ராட்டஜியா இருக்காதுனு நம்புவோமாக.
இனிமேலாவது யாரும் இது போன்று சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
அடுத்து சாம் கேப்டன்சி பற்றி பேச்சு வந்தது. இந்த வாரம் ஏன் கேப்டன் ஆனேன்னு நினைக்கற அளவுக்கு பிரச்சினைகள், குற்றச்சாட்டுகள், பர்சனல் அட்டாக் நடந்துருக்கு சார்னு சாம் விளக்கம் கொடுத்தாங்க.
நீங்க ஒருத்தரோட கைப்பாவை ஆகிட்டீங்க, சோம் மேல வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உங்களுக்கும் பொருந்தும்னு, இங்க இருந்து பார்க்கும் போது நீங்க ஒரு manipulated கேப்டனா தெரியறிங்கனு கமல் சார் சொன்னதுக்கு சாம் பதில் சொல்ல ட்ரை பண்றாங்க. அப்ப இடைமறிக்கும் கமல் உங்களை கேப்டனாக்கினதுக்கான அரசியல் ஆதாயங்களை பாலாஜி எடுத்துக் கொண்டார் என்கிற உணர்வு வருது. இது சரியா தவறானு.... நீண்ட கேள்வி கேட்டார்.
அது உண்மை தான் சார்னு சொல்லி மேற்கொண்டு பதில் சொல்றதுக்கு முன்னாடி மீண்டும் இடைமறித்த கமல் சார், அந்த உண்மை மட்டும் பேசுவோம்னு சொல்றாரு..
பாலாஜியோட எதிரிகள் உங்கள் எதிரிகளாக மாறி, விவாதங்கள் நடந்தது உங்களுக்கு புரிஞ்சுதானு கமல் சார் கேட்டார்.
பாலாஜிக்குனு தனியா நான் எந்த சலுகையும் காட்டலை. எல்லாருக்கும் ஒரே மாதிரி, ஒரே குரல்ல தான் பேசினேன். யார் தப்பு செஞ்சாலும் சுட்டிகாட்டேன். யாருக்கும் சாதகமா இல்லை சார்னு சாம் பதில் சொல்றாங்க.
பாலாஜி மைக் மாட்டாத போது சாம் எதுவுமே சொல்லாத மாதிரி நமக்கு காண்பிக்கபட்டது. ஆனா அது உண்மையில்லை. ஒவ்வொரு தடவையும் பாலாஜி கிட்ட சாம் சொன்னதா சுரேச்க் சாட்சி சொல்றாரு.
பாலா சனமை ரெண்டாவது தடவை திட்டும் போது சாம் எதுவும் சொல்லவே இல்லைனு ஒரு பாயிண்ட் வரும் போது ஆரி உள்ள நுழைஞ்சு பேச ஆரம்பிக்கறாரு. அவரையிம் இடைமறித்து நிறுத்தறாரு நமல் சார்.
பாலா சனம் விஷயத்துல தூண்டி விடப்பட்டு அந்த சம்பவம் நடந்தது. என் விஷயத்துல அப்படி கிடையாதுனு விளக்கம் கொடுத்தாங்க சாம். நான் யாருக்கும் எந்த சலுகையும் காட்டலைனு தெளிவா சொன்னாங்க சாம்.
ஆரி தன்னுடைய தனிபட்ட விரோதத்தை தீர்த்துக்க தான் இந்த வாரம் முழுவதும் சாம் கேப்டனாக தகுதியில்லை சொன்னதா எனக்கு தோணின ஒரு விஷயம்னு கமல் சார் ஆரி கிட்ட கேக்கறாரு.
ஆரி : எனக்கும் சாம்க்கும் எந்த தனிப்பட்ட விரோதமும் கிடையாது. 5 வாரத்துல எங்களுக்குள்ள வாக்குவாதமோ, உரையாடலோ கூட நடந்ததே இல்லை. "போன வாரம் நான் ஜெயிலுக்கு போகும் போது, அடுத்த வாரம் ஒவ்வொருத்தரையும் நான் கேள்வி கேப்பேன்னு சொல்லிட்டு போனேன். அப்ப நான் வார்னிங் கொடுத்து மிரட்டிட்டு போறதா பாலா சொன்னாரு. நான் திரும்பி வந்து அப்படி இல்லைனு தெளிவு படுத்திட்டு போனேன்."
இது தான் ஆரி பேசினது. இதுக்கும் கமல் சார் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்னு தான் தெரியல..
விமர்சனம் எப்போதும் constructive இருக்கனும். நீங்க இங்கேயே தான் இருக்க போறிங்க. ரொம்ப பர்சனலா போகாதீங்க. அவங்க தவறை திருத்திகிட்டா நல்லது தானே... இந்த விஷயம் தான் நான் சுட்டி காட்டிருந்தேன். ஆரி மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைச்சு பேசறாரு. அவர் போடற சண்டைக்கு அப்புறம் யாரும் அவர் இருக்கற திசைக்கே திரும்ப மாட்டாங்க.
மறுபடியும் கிளீனிங் டீம் ஹேண்ட் ஓவர் செய்யாத மேட்டர் பத்தி பேச்சு வருது. ஏற்கனவே அன்சீன்ல இருந்த விஷயம் தெளிவா எழுதிருந்தோம். அதை அர்ச்சனாவும் தெளிவு படித்தினாங்க. அந்த விஷயம் கிட்டத்தட்ட ஹவுஸ்மேட்ஸ் அத்தனை பேரும் சம்பந்தபட்டிருக்காங்க.
விமர்சனம் என்பது செதுக்கும் விமர்சனமாக இருக்க வேண்டும், தாக்கும் விமர்சனமாக இருக்கக்கூடாது. அதுவும் தனிப்பட்ட முறையில் தாக்கும் விமர்சனமாக இருக்கக்கூடாதுனு கமல் சார் சொன்னது ஆரிக்கு தான்.
அடுத்து பேசிய ஆரி "நான் பர்சனல் அட்டாக் செஞ்சேன்னு கேஸ் கொடுத்தேன்னு சொன்ன உடனே தான் நான் ரொம்ப ஹர்ட் ஆகிட்டேன்னு" சாம் பத்தி சொல்றாரு ஆரி. ஆக இப்ப வரைக்கும் கோர்ட் ரூம்ல இவர் மேல கொடுத்த கேஸ் என்னன்னு ஆரிக்கு தெரியவே இல்லை. கோர்ட் ரூம்ல ஆரி பேசி முடிச்ச உடனே தன்னோட பைனல் ஆர்கியுமெண்ட்ல தான், ஆரி தன்னை பர்சனல் அட்டாக் செஞ்சாருனு சாம் பதிவு பண்றாங்க. ஆனா ஆரி அதையே மாத்தி பேசறாரு.
சம்பந்தமே இல்லாம இன்னொரு விஷயம் சொன்னாரு ஆரி. இந்த வாரம் நான் சரியா வேலை செய்யலைனு எல்லார் முன்னாடியும் பதிவு செய்யறாரு. ஆனா இந்த வாரம் பெஸ்ட் பர்பாமர் யாருன்னா ஆரி தான். இந்த முரண்பாடுகள் தான் ஆரி மேல வைக்கும் விமர்சனம்.
ஒரு கேப்டன் எப்படி இருக்கனும்னு இந்த வாரம் நீங்க காட்டுங்கனு கமல் சார் சொல்லி முடிச்சாரு.
கோர்ட் விவாதம் இன்னும் முடியலனு கோடிட்டு காட்டிட்டு, யாரும் சேவ் ஆகலனு சொல்லிட்டு கிளம்பிட்டாரு கமல் சார்.
இன்னிக்கு என்ன நடக்குதுனு பார்ப்போம்.