முதல் முறையாக பழங்குடியினர் இனத்தை சார்ந்த அரச்சகர்!
திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேரளா மாநிலத்தில் 1200க்கும் மேற்பட்ட கோவில்களை நிர்வகித்து வருகிறது. இந்த கோயில்களில் பட்டியலினத்தை சார்ந்த 19 பேரை அர்ச்சகராக நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசு அமைந்தது முதலாக தேவசம் வாரியங்களில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஜாதி பாகுபாடு இன்றி கோயில் அர்ச்சகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் மாநிலத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பிராமணர்கள் அல்லாத 133 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதன் தொடர்ச்சியாக வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக பட்டியலினத்தை சார்ந்த 18 பேரும், பழங்குடியினர் இனத்தை சார்ந்த ஒரு நபரும் கோவில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவர்கள் அனைவரும் தாங்கள் நியமிக்கப்பட்ட கோவில்களில் பகுதி நேர அர்ச்சகர்களாக செயல்படுவார்கள். இதற்கு முன் பழங்குடியினர் இனத்திலிருந்து இதுவரை யாரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டது இல்லை. முதல் முறையாக இப்போது தான் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த ஓவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.