பல்லாரியை பதுக்கியது பாஜக பிரமுகரா?
வட மாநிலங்களில் கன மழை, விளைச்சல் குறைவு போன்றவற்றால் பல்லாரி விலை உயர்ந்த நிலையில் தமிழகத்தில் பதுக்கல் காரணமாகவும் விலை அதிகரித்துள்ளது. பெரிய வியாபாரிகள் வெங்காயத்தைப் பதுக்கி செயற்கை தட்டுப் பாட்டை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் பெரம்பலூர் மாவட்டத்தில் சில கோழிப் பண்ணைகளிலும் கிடங்கிகளிலும் பெரிய வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.பெரம்பலூர் மாவட்டத்தில் நாட்டார் மங்கலம், செட்டி குளம், குரும்பலூர், புதூர் மேலப்புலியூர் மற்றும் இருர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெங்காய கொட்டகைகளில் பல நூறுடன் பல்லாரி வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தீபாவளி சமயத்தில் அதிக விலைக்கு விற்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பாக ஆலத்தூர் பகுதியில் உள்ள இருர் கிராமத்தில் மூடப்பட்ட கறிக்கோழி பண்ணைகளை வாடகைக்கு எடுத்த வெங்காய வியாபாரிகள் அங்கு பல்லாரி வெங்காயத்தைப் பதுக்கி வைத்துள்ளனர்.மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆலத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் அங்கு பல்வேறு இடங்களில் பெல்லாரி வெங்காயம் டன் கணக்கில் பதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனாலும் இது தொடர்பாக யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
இந்த பதுக்கலின் பின்னணியில் திருச்சியில் வெங்காய மண்டி நடத்தும் பா.ஜ க பிரமுகர் இருப்பதாகக் கூறப்படுகிறது இதன் காரணமாகவே நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.