ஆண்டவர் வருகை... ஆரி-பாலா வாக்குவாதம் , மன்னிப்பு கேட்ட ஆரி - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 36
நேற்றைய சிசன் முடிந்த பிறகு பாலா, ஆரி இருவரும் வாக்குவாதத்தில் இறங்குகிறார்கள். அதே குற்றச்சாட்டு, அதே கேள்வி, அதே பதில்கள். தான் எந்த தப்புமே செய்யலைனு திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தார் ஆரி. பாலாவும் அப்படியே... வார்னிங் அப்படிங்கற ஒத்த வார்த்தையை வச்சுட்டு இவங்க அடிக்கற கூத்து.... போன வாரம் ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி ஆரி வீராவேசமா பேசிட்டு போனாரு. அப்படி பேசினதை வார்னிங் கொடுத்தாருனு பாலா சொல்றாரு. வார்னிங் அப்படிங்கற வார்த்தையை யூஸ் பண்ணவே இல்லைனு ஆரி சொல்றாரு. ரெண்டு பேர் சொல்றதும் உண்மை தான். இதை யாராவது எடுத்து சொன்னா பரவால்ல.
போன வாரம் தன்னை போரிங்னு பிராண்ட் செஞ்சவங்களுக்கு மத்தியில, எழுந்து நின்னு காமிச்சுருக்காரு ஆரி. என்னால இப்படி கூட விளையாட முடியும்னு காட்டிருக்காரு. அதுக்கான டார்கெட்டா அவர் தேர்ந்தெடுத்தது பாலா மற்றும் சாம். அவர் தேர்ந்தெடுத்த பிரச்சினைகள் சனம், சோம் இருவரோட பிரச்சினை. ஆரிக்கும், பாலாவுக்கும் நேரடி மோதல் இல்லை. போன வாரம் கமல் சார் வந்த நிகழ்ச்சில கிரீடம் வைக்கற டாஸ்க் நடந்தது எல்லாருக்கும் நினைவிருக்கலாம். அந்த டாஸ்க் நடக்கும் போது இடைவெளில ஆரியும், பாலாவும் தனியா பேசிக்குவாங்க.
உங்களை அட்வைஸ் ஆரினு முதன் முதல்ல சொன்னது நான் தான்னு அப்ப பாலா சொல்லுவாரு. அங்கேயே ஆரிக்கு அட்வைஸும் தருவாரு பாலா. அந்த டாஸ்க் தொடர்ந்து நடக்கும் போது பாலாவுக்கு பாசிட்டிவ் கிரீடம் கொடுப்பார் ஆரி. எதுவா இருந்தாலும் நேர்மையா சொல்லிட்டு செய்யறான். நான் இப்படித்தான் விளையாடப் போறேன். முடிஞ்சா ஜெயிச்சுக்கோனு சவால் விடறான். அதனால பாலாவுக்கு நான் இந்த கிரீடத்தை தரேன்னு சொல்லி கொடுத்தது ஆரி.
இந்த வாரம் நாமினேஷன்ல வந்தது, அர்ச்சனா டீம் கூட வந்த பிரச்சினை, சாம் கேப்டன் ஆனது, அவங்க வார்த்தையை விட்டது, சனம்-பாலா சண்டைல பாலா அவமானபடுத்தினது, இந்த கேம்ல பிண்ணனனில இருக்கறது எல்லாம் சேர்ந்து ஆரியை ஒரு கொந்தளிப்பான மனநிலைக்கு கொண்டு போகுது. இந்த வாரம் முழுவதும் ஆரி அப்படித்தான் இருந்தார்.
இந்த வாரம் ஆரியின் கேம் முழுவதுமே ஸ்டேட்டர்ஜி தான். அவரது குறிக்கோள் ஒன்று தான். பாலாவிற்கு இந்த வீட்டில் கிடைத்த முக்கியத்துவம் அவருக்கும் கிடைக்க வேண்டும். மற்றவர்கள் அவரை டார்கெட் செய்யும் இடத்தில் இருந்து மற்றவர்களை டார்கெட் செய்யும் இடத்திற்கு நகர்ந்திருக்கிறார். அவ்வளவு தான்.
ஆரி - பாலா - சாம் சண்டை கொஞ்சம் இடைவெளி விட்டு தொடர வாய்ப்புண்டு. இந்த வாரம் ஆரி கேப்டன் ஆதலால் பாலாவின் சேட்டைகளுக்கு ஆரி என்ன செய்யப் போகிறார் என்பதை காண காத்திருக்கலாம். இந்த சண்டையில் வாண்டடடாக வந்து வண்டியில் ஏறப்பார்த்தார் சனம்.
ஆண்டவர் வருகை...
பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு எற்படுவதை பற்றி பேசினார். பட்டாசு வெடிக்க வேணாம்னு சொல்லலை, வெடிக்காம இருந்தா நல்லாருக்கும்னு தான் சொல்றேன்னு சொல்லி முடிச்சாரு.விவாத மன்றத்தில் நீதி கிடைத்ததா? நியாயம் கிடைத்ததா? ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் பொதுவாக கேட்டார்.
முதல்ல ஆரி ப்ரோ தான் ஆரம்பிச்சு பேசினாரு. இந்த வாரத்துல ஆரி எப்ப பேசினாலும் சாம், பாலா ரெண்டு பேரையும் இழுக்காம எதையுமே பேசலை. நேத்து அவர் என்ன சொல்ல வந்தாருனு யாராவது டீகோடிங் செஞ்சு சொல்லுங்க.
நீதி கிடைத்ததா கேள்விக்கு சனம்க்கு ஆதரவா பாலா ஆர்கியுமெண்ட் பண்ணதை எடுத்து பேச ஆரம்பிச்சாட்டாங்க. எல்லாம் ஆரி ப்ரோவின் மகிமை.
ஆரி, சாம், சனம், பாலா நாலு பேரை தவிர வேற யாருக்கும் கேஸ் இல்லையா? னு கமல் சாரே கேக்கற அளவுக்கு இந்த வாரம் முழுசா அவங்களே பேசிட்டு இருக்காங்க. அடுத்து சுச்சிக்கு சின்னதா ஒரு பாராட்டு கிடைச்சது.
சுரேஷ், கேப்பி கேஸ் பத்தின பேச்சு வந்தது. கேஸ் கொடுக்க வேற யாரும் இல்லாததால தாத்தா மேல கொடுத்தேன்னு கேப்பி சொன்னாங்க. சுச்சி கூட அவங்க லிஸ்ட்ல இருந்தாங்களாம்.
சனம்க்கு கண்டப்ட் ஆப் கோர்ட் கொடுத்தது, பாலாவை கண்டிக்காதது, சாம்க்கு பேச வாய்ப்பளித்தது, சனமக்கு பேச வாய்ப்பு கொடுக்காம ஆரிக்கு கொடுத்தது போன்ற சுச்சியின் செயல்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அவங்க சொன்ன பதிலையும் கோனார் நோட்ஸ் வச்சு தான் பொழிப்புரை செய்யனும். அவ்வளவு சுத்தல்.
நெருங்கின நட்பு வட்டத்துக்குள்ள இருக்கறவங்களோட தவறுகளை பார்க்க மறந்துடறோம். அதே மாதிரி வெளி வட்டத்துக்குள்ள இருக்கறவங்களோட நியாயத்தை பார்க்க மறந்துடறோம் சார். அது தான் கோர்ட் ரூம்ல நடந்தது என்று ஆரி சொன்ன விஷயம் அட்டகாசம்.
"இங்க மட்டும் இல்லங்க, எல்லா இடத்திலும் இதே தான் நடக்குது. நியாயத்தை சொல்ல விடாமல் நிறைய சத்தம் போட்டுட்டா நியாயம் அடங்கி போய்டும்னு பலரும் நினைச்சுக்கறாங்க." என்று கமல் சொன்னதற்கு ஆரியும் சேர்ந்து குழப்பத்துடன் கை தட்டினார். சந்தேகமே வேணாம் ஆரி ப்ரோ, அது உங்களுக்கும் சேர்த்து தான் சொன்னார்.
சம்யுக்தாவை பார்த்து ஆரி சத்தம் போட்டு பேசியதும் பிழை தான். அதையும் இங்க சொல்லியாகனும். "சத்தம் போட்டு பேசுவது வெற்றிக்கு வழி வகுக்காது, சத்தத்திற்கு தான் வழி வகுக்கும்" என்று கமல் சார் சொன்ன போது, ஒரு சோடா குடிச்சா தேவலாம்னு இருந்தது உண்மை.அதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்னு சொன்ன ஆரி ப்ரோ அதோட நிறுத்தாம, அதை ஏன் செஞ்சேன்னு ஜஸ்டிபிகேசன் கொடுத்துட்டு தான் உக்காந்தாரு.
கோர்ட் ரூமில் சிறப்பாக செயல்பட்டதற்காக ரம்யாவும், ரியோவுக்கும் பாராட்டு கிடைத்தது. ஆனா பேட் பர்பாமருக்கு இவங்க பேர் வரவே இல்லை. என்னமோ போங்கய்யா....
கோர்ட் ரூம்ல அவ்வளவு களேபரம் நடந்த போது ஸ்ரீரங்கப் பெருமாள் மாதிரி ஆனந்த சயனத்தில் இருந்த ஜித்து பாய் தான் அடுத்த கண்டண்ட். பேசலாம்னு வந்த போதெல்லாம் பின்னாடி தள்ளிவிட்டுட்டாங்க சார்னு ஜாலியா சொன்னாரு ஜித்து பாய்.
ஜித்து, சோம் கேஸ் பத்தியும், ரியோ, நிஷா கேஸ் பத்தியும் விவாதம் நடந்தது.
இந்த வார புத்தக அறிமுக. எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் மோகினி என்ற பெயரில் எழுதிய "அடிமையின் காதல்" புத்தகத்தை அறிமுகம் செய்தார்.
அடுத்து நேரடியாக எவிக்சன் ப்ராசஸ்
பாலா, அனிதா, ஆரி மூவரும் சேவ் செய்யப்பட்டார்கள். அப்போது ஆரியின் பர்பாமன்ஸ் தான் ஹைலைட். பாலாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்னு நா தழுதழுக்கச் சொன்னார். "யப்பா டேய் நான் சுகர் பேஷண்டுடா மொமண்ட்"... சம்யுக்தா கிட்ட மன்னிப்பும் கேட்டுகிட்டார்.
சுரேஷ் தான் எவிக்ட் ஆனார் என்பதை சீக்கிரமாகவே சொல்லி முடித்தார். சுரேஷும் அங்கிருந்து கடகடனு கிளம்பிட்டாரு. ஹவுஸ்மேட்ஸ் எப்பவும் செய்யறா மாதிரி கட்டிபிடிக்க வந்த போதும், விட்ருங்கடானு ஓடியே வந்துட்டாரு. செம்ம ஜாலியா இருந்தார்.
வெளிய வந்த சுரேஷுக்கு ஒரு குறும்படம் போட்டு காண்பிக்கபட்டது. தீபாவளி அடுத்த வாரம் தான் வருது, நீங்க இன்னிக்கே கொண்டாடுங்கனு அகம் டிவி வழியே உள்ள கூட்டிட்டு போனாரு கமல் சார்.
சுரேஷும் முடிஞ்சவரைக்கும் ஒவ்வொருத்தரை பத்தியும் ஓபனா பேசிட்டு கிளம்பிட்டாரு.
போன வாரம் இருந்த காட்சிகள் இந்த வாரம் இல்லை. சுமங்கலி மேட்டர்ல அனிதா பக்கம் நின்னது பாலாவும், சாம். அனிதாவை பாராட்டி பேசினதுக்கு அப்புறம் பாலா கிட்ட தான் தன்னோட சந்தோஷத்தை பகிர்ந்துகிட்டாங்க அனிதா. ஆனா போன வாரம் அவங்க ஆரியோட கூட்டணில போயாச்சு. சுரேஷ் சொன்னா மாதிரி வீடு இப்ப 3 குரூப்பா இருக்கு. புதுசா முளைச்சுருக்கற குரூப் கையில தான் இந்த வாரம் அதிகாரம் இருக்கு. என்ன நடக்குதுனு பார்ப்போம்.