நிதியில்லை...பசியில் வீழும் இந்திய ராணுவம்!

சர்வதேச ராணுவத் தளவாடங்களைப் பெருக்குவதில் உலகின் வளர்ந்த நாடுகள் முயற்சித்து வரும் வேளையில் ராணூவ வீரர்களுக்கு சாப்பாடு வழங்குவதற்கே நிதி போதாமல் பற்றாக்குறையால் தவித்து வருகிறது இந்திய ராணுவம்.

ஆசியாவில் சீனாவுக்குப் போட்டியாக எந்தவொரு நாடும் ராணுவம் உள்ளிட்ட பல உட்கட்டமைப்புகளிலும் பின் தங்கியே இருந்தாலும் இந்தியா மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சீனாவுடன் போட்டிபோடும் வகையிலேயே தனது ராணுவ பட்ஜெட்டை மட்டும் வெளியிடும்.

ஆனால், நிதர்சனத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்குக் கூட சாப்பாடு வழங்க முடியாத அளவில் தான் இந்திய ராணுவத்தின் நிதி நிலைமை உள்ளது. மேலும், இந்திய ராணுவத்தில் இருக்கும் அல்லது பயன்படுத்தப்பட்டு வரும் ஆயுதங்கள், கருவிகள் யாவும் விண்டெஜ் கருவிகள் என்றழைக்கும் சூழ்நிலையிலேயே உள்ளது.

இவ்வளவு பழைய ஆயதங்களாலும் கருவிகளாலும் நிறைந்திருக்கும் இந்திய ராணுவம், தற்போது ஏதொவொரு போர் ஏற்படும் சூழலில் வந்து நின்றால் பத்து நாள்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்பதே இந்திய ராணுவ உயர் அதிகாரிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

1962-ம் ஆண்டு சீனா உடனான போருக்குப் பின்னர் இந்த நிதியாண்டில்தான் ராணுவ பட்ஜெட் வழக்கமான ஜிடிபி விகிதத்தைவிட 1.6 சதவிகிதம் குறைவாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>