பிரபல நடிகரால் முதல்வருக்கு கொரோனா பரிசோதனை? மற்றொரு நடிகருக்கும் சோதனை, வீடியோ வைரல்
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் படப்பிடிப்புகள் தொடங்கின. ஒரு மாதம் கடந்த போதிலும் தென்னிந்திய சீனியர் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி போன்றவர்கள் படப்பிடிப்பில் பங்கேற்காமலிருந்தனர்.
நடிகர் சிரஞ்சீவி ஆச்சார்யா படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பில் இன்று முதல் பங்கேற்கவிருந்தார். படப் பிடிப்புக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆச்சார்யா படப்பிடிப்பில் பங்கேற்பதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா பாசிடிவ் எனத் தெரியவந்தது. என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த சில நாட்களில் என்னைத் தொடர்புகொண்டவர்களும் தங்களை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு சிரஞ்சீவி கூறி உள்ளார்.சிரஞ்சீவி விரைந்து குணம் அடைய திரையுலகினரும் ரசிகர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.சிரஞ்சீவி நேற்று முந்தினம் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவை நேரில் சந்தித்துப் பேசினார். அவருடன் நடிகர் நாகார்ஜூனாவும் சென்றிருந்தார்.
தற்போது சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி இருப்பதால் இதையடுத்து முதல்வர் மற்றும் நாகார்ஜூனா இருவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மூச்சுக்காற்றால் பரவும் தொற்று என்பதால் மருத்துவ பரிசோதனை முக்கியமானது என டாக்டர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே டைரக்டர் ராஜமவுலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது அவரது குடும்பத்தினருக்கும் தொற்று பரவியது. அதே போல் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு தொற்று ஏற்பட்டு பிறகு அவரது தந்தை அமிதாப்பச்சன், மனைவி ஐஸ்வர்யாராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கு பரவியது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று பின்னர் குணம் அடைந்தனர். அதேபோல் நடிகை தமன்னாவின் பெற்றோருக்குத் தொற்று ஏற்பட்டது. பின்னர் அது தமன்னாவுக்கும் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.