ரசிகர்களின் அனுதாபத்தை சம்பாதிப்பதில் கவனம் செலுத்தும் பிக் பாஸ் நடிகை..!
வனிதா விஜயகுமார் என்ற பெயர் கேட்டாலே தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பிக் பாஸில் இருந்து இன்று வரை பல சர்ச்சையில் சிக்கி கொண்டு பல பிரச்சனைகளை சமாளித்து வருகின்றார். இவர் பிக் பாஸ்க்கு சென்று வந்த பிறகு சின்னத்திரை சினிமாவில் பல வாய்ப்புகளை பெற்றார். குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமையலில் அவரது திறமைகளை காட்டி வெற்றி கோப்பையை வென்றார். இவர் தனியாக ஒரு சேனலை ஆரம்பித்த பொழுது அதற்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவருடன் காதல் மலர்ந்தது. பீட்டர் பாலுக்கு ஏற்கனவே கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இதனால் பல தடைகள் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சந்தோஷமாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு புயல் அடித்தது. இவர்கள் குடும்பத்தோட சில நாட்களுக்கு முன்பு கோவா சென்று வந்தனர். அப்பொழுது பீட்டர் பால் குடித்து விட்டு கலாட்டா செய்ததால் இருவருக்கும் பெரிய பிளவு ஏற்பட்டது. இது குறித்து பல விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று பீட்டர் பாலை பிரிந்ததில் மிகவும் கஷ்டமாக உள்ளது என்றும் மக்களை கவரும் விதமாக தேம்பி தேம்பி அழுதுள்ளார். இதனால் வனிதாவின் ராசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். சிலர் வழக்கம் போல வனிதாவை கழுவி ஊற்றி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் பீட்டருக்கு செல்லும் இடமில்லாமல் ரோட்டில் தான் படுத்து தூங்குகிறார் என்று பல வித தகவல்கள் கசிந்துள்ளது.