அன்று மதுரை முத்து.. இன்று ராஜீவ்.. பிறந்த நாளில் காமெடி நடிகருக்கு நேர்ந்த துயரம்!
சில ஆண்டுகளுக்கு முன் பிரபல காமெடியன் மதுரை முத்து தனது மனைவியை இழந்தார். அந்த சோகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீண்டு வருகிறார். இப்போது முத்துவுக்கு ஏற்பட்ட சம்பவத்தை போல இன்னொரு காமெடியனுக்கும் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரபல இந்தி சின்னத்திரைக் காமெடி நடிகர் ராஜிவ் நிகாம் தன் பிறந்தநாள் அன்று தன்னுடைய மகனை இழந்தச் சம்பவத்தை உருக்கத்துடன் ரசிகர்களிடம் முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் ராஜீவ் நிகாம். டிவி ஸ்டேன்ட் அப் காமெடி சீரியஸான 'ஹர் ஷாக் பெ உலு' தொடர்களில் நடித்து பிரபலமானவர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய பிறந்த நாளன்று தன் மகன் இறந்த சோக செய்தியை கூறியுள்ளாா்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் விளையாட சென்று வீடு திரும்பிய பிறகு அவனின் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரது மகன் கோமா நிலைக்குச் சென்றபின் ராஜீவின் வாழ்க்கை ஒரு கடுமையான திருப்பத்தை சந்தித்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு, அதாவது 2018 மே மாதம் தனது மகன் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாக ராஜீவ் நிகம் தெரிவித்தார். ஆனால் நிகாமுடன் நெருக்கமாக இருந்த செய்தியாளர் ஒருவர், ``அவரின் மகன் கோமா நிலையில் இருந்தபோதுதான் ராஜீவ் நடித்த ஷோ மிக பிரபலமாகி மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றாா் எனவும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் அவரின் தந்தை உயிரிழந்தார் என்ற மற்றோரு சோகமான செய்தியையும் அவர் பகிர்ந்துள்ளார்.