வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதுதான் பாக்கி... விவாகரத்து முடிவில் மெலனியா டிரம்ப்?!
அமெரிக்க அதிபா் தேர்தலில் தோல்வியற்ற டிரம்பை அவா் மூன்றாவது மனைவி மெலானியா டிரம்ப் அவரை விவாகரத்து செய்ய போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியதும், அவரை மெலனியா டிரம்ப் விவகாரத்து செய்து விடுவார் என்று வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர் ஸ்டிபன் வோல்கோஃப் கூறியுள்ளாா். டிரம்ப் - மெலானியாவின் மகன் போரனுக்கு சொத்தில் சமமான பங்கை வழங்க கோரி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.
மற்றொரு உதவியாளர் ஒமரோசா மனிகவுல்ட் நியூமன் டிரம்ப் பதவியில் இருந்து வெளியேறினால் மெலனியா டிரம்ப் விவகாரத்து செய்து விடுவார். இதற்காகவே மெலனியா காத்திருக்கிறார் என்றும் கூறியுள்ளாா். டிரம்ப் பதவியில் இருக்கும் போது மெலானியா விவகாரத்து செய்ய முயற்சித்தால், டிரம்ப்புக்கு பெரும் அவமானமாக அமையும் என அவர் கருதுகிறார். டிரம்ப் - மெலனியா இடையே மனக்கசப்பு இருந்ததாக முன்பே தகவல்கள் வந்தாலும் இதுவரை அவர்கள் இந்த தகவலை மறுத்தே வந்துள்ளனர்.