ஐ-போன் அம்சங்களுடன் 10ஆயிரம் ரூபாய்க்கு மொபைல்: லாவா-வின் புதிய அறிமுகம்
லாவா மொபைல் ஜி வரிசையில் தற்போது புதிதாக லாவா ஜி-91 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
லாவா மொபைல் நிறுவனம் தந்னுடைய ஜி வரிசை மொபைல் போன் வரிசைகளில் மேலும் ஒரு புது வரவை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. லாவா ஜி ஸ்மார்ட்போன் வரிசையில் ஜி60, ஜி70, ஜி80 மற்றும் ஜி90 வரிசையில் தற்போது முற்றிலும் புதிதாகக் குறைந்த விலையில் ஐ-போன் அம்சங்களுடன் ஜி91 சந்தைக்கு வந்திறங்கியுள்ளது.
9,999 ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ள லாவா ஜி91 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் வசதியுடன் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. கூடுதலாக மெமரி கார்டு 128ஜிபி வரையில் பயன்படுத்திக்கொள்வதற்கான வசதியும் உள்ளது. விரல் ரேகை சென்சார், முகம் பாஸ்வேர்டு சென்சார் என குறைந்த விலையில் நிறைவான பல அம்சங்களுடன் லாவா ஜி91 சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.