மெகா ஸ்டார் படத்தை துரத்தும் இயற்கை தடைகள்.. குடும்பத்தினர் கலக்கம்..
2020 மிக மோசமான ஆண்டாகவே அனைவராலும் கணிக்கப்படும் உலகில் ஆயுத யுத்தம் இல்லாமல் பயோ யுத்தம் ஒன்று கொரோனா வடிவில் மக்களைத் தாக்கி பல லட்சம் பேரைப் பலி வாங்கி இருக்கிறது. பொருளாதார சீரழிவு தொழில் முடக்கம் என அடுக்கிக்கொண்டே போகலாம். திரையுலகம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி மீளமுடியாமல் தவிக்கிறது.
பிரபலங்கள் அமிதாப்பச்சன் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், விஷால், ராஜமவுலி , எஸ்பி. பாலசுப்ரமணியம், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், டாக்டர் ராஜசேகர், ஜீவிதா எனப் பலருக்கு கொரோனா தொற்று பரவியது. இவர்கள் எல்லோருமே சிகிச்சைக்கு பிறகு மீண்டாலும் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார். டாக்டர் நடிகர் ராஜசேகர் தீவிர சிகிச்சையிலிருந்து நேற்று வீடு திரும்பினார்.
இந்தி நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான் கான், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, நடிகர் சேது. வடிவேல் பாலாஜி ஆகியோர் மாரடைப்பில் மரணம் அடைந்தனர். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக நேற்று மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆச்சார்யா படப்பிடிப்பில் பங்கேற்பதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா பாசிடிவ் எனத் தெரியவந்தது. என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த சில நாட்களில் என்னைத் தொடர்பு கொண்டவர்களும் தங்களை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்பட்டுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு சிரஞ்சீவி கூறி உள்ளார்.
சிரஞ்சீவி விரைந்து குணம் அடைய திரையுலகினரும் ரசிகர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தை கோரட்டலா சிவா இயக்குகிறார். எப்போது மீண்டும் படப் பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 10 மாதத்துக்குப் பிறகு கேமராவை தூசி தட்டினால் திடீரென்று சிரஞ்சீவிக்கு கொரோனா உறுதியானது. இது அனைத்து திரையுலகினரையும், படக் குழுவினரையும், மக்களையும் அச்சுறுத்தி உள்ளது. படத்தின் இயக்குனர் தற்போது மிகுந்த கவலையில் ஆழ்ந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது, அடுத்த 2021ம் ஆண்டுக்குள் ஆச்சார்யா படத்தை முடித்து ரிலீஸ் செய்ய முடியுமா என்ற கேள்வி அவரை டென்ஷனில் ஆழ்த்தி உள்ளது. தற்போது தொற்று நோய் காலம் காரணமாக ஷூட்டிங் மீண்டும் ஒத்தி வைக்கப்படுகிறது. தொற்று ஒரு பக்கம் பயமுறுத்தச் சமீபத்திய ஆந்திர வெள்ளம் ஆச்சார்யா அணிக்குக் கோடிகளில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ஆச்சார்யா' படத்தில் தந்தையுடன் மகன் ராம் சரண் ஒரு முக்கிய வேடத்திலும், காஜல் அகர்வால் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஆனால் ஆச்சார்யாவை அசைய விடாமல் தடைக்கு மேல் தடை இயற்கையே ஏற்படுத்தி வருகிறது.ஏற்கனவே சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படம் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுத் தள்ளிப்போடப்பட்டது.ஆச்சார்யா சென்ட்டிமென்ட்டாக சிரஞ்சீவிக்குப் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இயற் கையே இந்த தடை ஏற்படுத்தும் நிலையில் அதுபற்றி சென்டிமெணன்ட்டாக குடும்பத்தினரும் கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர். ஒரு சிலர் படத்தின் டைட்டிலை மாற்றும்படி கூறிவருகிறார்கள். சினிமாவே சென்டிமென்ட் நிறைந்த உலகம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.