மீண்டும் சி.எஸ்.கே..! உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய கேப்டன் கூல் தோனி!
கேப்டன் கூல் என்றழைக்கப்படும் தோனியே சி.எஸ்.கே கம்பேக் குறித்துப் பேட்டி அளிக்கையில் உணர்ச்சிவசமாகி கண்கலங்கியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆர்வத்தை மட்டும்தான் அதிகப்படுத்தியிருக்கும். ஆனால், சி.எஸ்.கே ரசிகர்களுக்கோ பிறவிப்பலனை அடைந்ததைப் போன்ற உணர்வுடன் களத்தில் விசில் போடக் காத்திருக்கின்றனர்.
மேட்ச் ஸ்பாட் ஃபிக்ஷிங்-ல் ஈடுபட்டதால் இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட முடியாமல் இந்தாண்டு புது புத்துயிர் பெற்று களம் இறங்குகிறது சி.எஸ்.கே அணி. இந்த கம்பேக் குறித்து கேப்டன் தோனி கூறுகையில், "எல்லாவற்றையும் ஒரு சின்ன புன்னகையுடன் கடந்து வந்துவிட வேண்டும். ஆம், சி.எஸ்.கே-வான நாங்கள் வந்துவிட்டோம். மீண்டும் வந்துவிட்டோம்." எனக் கூறும்போதே கண்கலங்கிவிட்டார் கேப்டன் தோனி.
கேப்டன் தோனி கண்கலங்கியதைக் கண்டதுமே ரெய்னா தண்ணீர் கொடுத்து தோனியை சமாதனப்படுத்தினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com