கொரோனாவில் உயிருக்கு போராடி மீண்டு வந்த நடிகர்.. மூக்கில் ஆக்ஸிஜன் டியூபுடன் நடமாடுகிறார்..

நடிகர் டாக்டர் ராஜசேகர் தமிழில் 1984ம் ஆண்டு புதுமைப்பெண் படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு புதிய தீர்ப்பு என ஒருசில தமிழ் படங்களில் நடித்தார். பிறகு தெலுங்கில் நுழைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்ததுடன் தனக்கென் ஒரு பாணி வகுத்து நடித்து வந்தார். போலீஸ் கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஷிவானி திரைப்படங்களில் நடித்து வருகிறார். ராஜசேகருக்கு கொரோனா பாதித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கடந்த மாதம் தகவல் பரவியது. ஆனால் அதை முதலில் மறுத்த ஜீவிதா பின்னர் மருத்துவமனையில் ராஜசேகர் சிகிச்சை பெறுவதை ஒப்புக் கொண்டு அவருக்காக பிரார்த் திக்கும்படி ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். ஐதாராபாத் தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் வைத்து ராஜசேகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவ்வப்போது மருத்துவ நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது.

தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் அபாய கட்டத்தை தாண்டி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது முழு மையாக குணம் அடைந்து நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அவரை குடும்பத்தினர் வரவேற்றனர், மருத்துவமனையிலிருந்து வந்தாலும் அவருக்கு ஆக்ஸிஜன் ட்யூப் மூக்கில் பொருத்தப்பட்டுள்ளது. வீட்டில் அவரை முழு ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். கொரோனாவில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு குணமாகி ராஜசேகர் வீடு திரும்பியதில் ஜீவிதா மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். ராஜசேகர் மட்டுமல்லாமல் ஜீவிதா மற்றும் இரண்டு மகள்களும் கொரோனா தொற்றால் கடந்த மாதம் பாதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு அவர்கள் குணம் அடைந்தனர். இதற்கிடையில் நேற்றுதான் நடிகர் சிரஞ்சிவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், விஷால், ராஜமவுலி, எஸ்பி. பாலசுப்ரமணியம், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன் என பல நட்சத்திரங்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்திருக்கின்றனர். வயதில் மூத்தவர்கள், அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்களை கொரோனா உடனே பாதிக்கிறது என்று கூறப்படுவதால் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஒரு சில சீனியர் நடிகர்கள் படப்பிடிப்பில் பங்கேற்பதை தள்ளிப்போட்டு வருகின்றனர். நம்பரில் தொடங்கவிருந்த அண்ணத்த படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மாதக்கணக்கில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்த அமிதாப்பச்சன் வீடு திரும்பிய சில நாட்களிலேயே கோன் பனேகா குரோர்பதி டிவி ஷோவில் கலந்துக்கொண்டார். அடுத்தடுத்து புதிய படங் களில் நடிக்க கால்ஹீட் கொடுத்து வருகிறார். தற்போது கொரோனாவிலி ருந்து குணம் ஆகி வீடு திரும்பி யிருக்கும் நடிகர் ராஜ்சேகரும் அர்ஜுனா என்ற தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

More News >>