யம்மி ப்ரூட் ஜாம் கேக் ரெசிபி ....
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகைகளில் ஜாமும் ஒன்று. இப்போ ப்ரூட் ஜாம் கேக் செய்றது எப்படினு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்
பொருள் - அளவுமைதா - 6 ஸ்பூன்கோகோ பவுடர - 2 ஸ்பூன்பொடித்த சீனி - 4 ஸ்பூன்வெஜிடபிள் ஆயில் - 2 ஸ்பூன்பேக்கிங் பவுடர - 1 ஸ்பூன்பால் - 1 கப்ப்ரூட் ஜாம் 3 ஸ்பூன்
செய்முறை
கோக்கோ பவுடர், சீனி, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கரைக்கவும். பிறகு அதன் மேலே ஆயில் சேர்த்து கலக்கி, கேக் கலவையை மைக்ரோவேவ் ஓவனில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.
2 நிமிடத்தில் வெளியே எடுத்து, அதன்மேல் ப்ரூட் ஜாமை வைத்து மீண்டும் 30 செகண்ட் வைத்து எடுக்கவும். சுவையான ப்ரூட் ஜாம் கேக் தயார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com