சிரஞ்சீவியுடன் சென்ற நடிகருக்கு கொரோனா டெஸ்ட்.. தனிமைபடுத்திக்கொண்டார்..

கொரோனா காலகட்டம் இன்னமும் மக்களையும், பிரபலங்களையும் அச்சத்திலேயே வைத்திருக்கிறது. பிரபலங்கள் அமிதாப்பச்சன் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், விஷால், ராஜமவுலி, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், டாக்டர் ராஜசேகர், ஜீவிதா எனப் பலருக்கு கொரோனா தொற்று பரவியது. இவர்கள் எல்லோருமே சிகிச்சைக்கு பிறகு மீண்டனர். டாக்டர் நடிகர் ராஜசேகர் தீவிர சிகிச்சையில் இருந்து நேற்று முன் வீடு திரும்பினார்.

ஆனால் அவருக்கு மூச்சுவிடு வதில் சிரமம் இருப்பதால் ஆக்ஸிஜன் டியூபுடன் நடமாடுகிறார். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியானது.ஆச்சார்யா படப்பிடிப்பில் பங்கேற்பதற்கு முன் கொரோ னா பரிசோதனை செய்தபோது கொரோனா பாசிடிவ் எனத் தெரியவந்தது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டார். கடந்த சில நாட்களில் என்னை தொடர்பு கொண்டவர்களும் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்பட்டுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

சிரஞ்சீவியுடன் நடிகர் நாகார்ஜூனா தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டி இருந்தது. இந்நிலையில் நடிகர் நாகார்ஜூனாவுக்கு கொரோனா டெஸ்ட் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.சிரஞ்சீவியை போல் அல்லாமல் நாகார்ஜூனா தெலுங்கு பிக்பாஸ் 4 சீசன் நடத்தி வருகிறார். எனவே அவர் உடனடியாக கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டி இருந்தது. ஷோவில் அவர் பங்கேற்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்கிறார். 60 வயதாகும் நாகார்ஜூனா பாதுகாப்புக்காகத் தன்னை தற்போதைக்கு தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.அவரைபோல் சிரஞ்சீவியும் தனிமையில் இருக்கிறார்.

இவரது உடல்நிலை பாதித்ததையடுத்து அவர் நடிப்பதாக இருந்தா ஆச்சார்யா படப்பிடிப்பு அடுத்த ஆண்டுக்குத் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.சிரஞ்சீவி விரைந்து குணம் அடைய திரையுலகினரும் ரசிகர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தை கோரட்டலா சிவா இயக்குகிறார். எப்போது மீண்டும் படப் பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 10 மாதத்துக்குப் பிறகு படப்பிடிப்பை தொடங்கும் போது சிரஞ்சீவிக்கு கொரோனா உறுதியானது. இதனால் பட இயக்குனர் தற்போது மிகுந்த கவலையில் ஆழ்ந்திருக்கிறார்.

More News >>