விஜய்யின் மாஸ்டர் பட டீஸர் புது குழப்பம்..
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்படவிருந்தது.ஆனால் தொற்று நோய் காரணமாக அடுத்த ஆண்டுக்குத் தள்ளப்பட்ட இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று லோகேஷ் கனகராஜ் இயக்கிய தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'மாஸ்டர்'.இப்படத்தின் வெளியீடு தாமதமாகி வருவதால், ரசிகர்கள் படத்தின் டீஸர் அல்லது ட்ரெய்லருக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கிறார்கள். 'மாஸ்டர்' டீஸர் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல் வலம் வந்துக்கொண்டிருகின்றன.
இதுபற்றி நேற்றிரவு முதல் உறுதிப்படுத்தப்படாத தகவலால் இணையத்தில் ரசிகர்கள் பரபரப்பு காட்டி வருகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமாகப் பட நிறுவனம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், சமீபத்தில் இயக்குனர் லோகேஷ், 'மாஸ்டர்' டீஸர் மற்றும் ட்ரெய்லர் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார், ஆனால் படத்தின் வெளியீட்டு திட்டங்கள் தெரியாமல் அவற்றை வெளியிட முடியாது எனத் தெரிவித்தார்.
நேற்றிலிருந்து தமிழ்நாட்டின் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், 'மாஸ்டர்' டீஸர் வெளியீட்டுத் தகவல் சமூக ஊடகங்கள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. முன்னதாக அக்டோபரில், படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ சார்பில் சமூக வலைத்தளத்தில் டீஸர் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. படத்தின் டீஸர் தீபாவளிக்கு வெளிவந்தால், அது ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.'மாஸ்டர்' லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் விஜய், விஜய் சேதுபதி ஆகியோருடன் மாளவிகா மோகன் கதாநாயகியாக நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா எரேமியா, சாந்தனு பாக்யராஜ், நாசர், ஸ்ரீமன், தீனா, ரம்யா சுப்பிர மணியம், சஞ்சீவ், அஷாகம் பெருமாள், ரமேஷ் திலக் ஆகியோர் ஒரு சிலரின் நடிக் கின்றனர்.
இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்திருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பிலோமின் ராஜ்.மாஸ்டர் பட ரிலீஸ் பற்றிய குழப்பம் ஒருபக்கம் நீடிக்க மற்றொரு பக்கம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய கட்சியைத் தேர்தல் தலைமை அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.தந்தை தொடங்கி உள்ள கட்சிக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அக்கட்சியில் எனது மன்றத்தினர் இணைவதோ அல்லது கட்சி பணியாற்றுவதோ கூடாது என்று விஜய் தெளிவான அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மேலும் தனது மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நேற்று விஜய் முக்கிய ஆலோசனை நடத்தினார்.