தீபாவளி நேர லஞ்ச வசூல் : அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை
தீபாவளி சமயம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச வசூல் தீவிரமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 77ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மற்றும் நாகை மாவட்டங்களில் டி.கல்லுப்பட்டி மற்றும் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 77ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.சென்னை மாதவரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடந்த சோதனையில் 30 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்காட்டில் நுகர்பொருள் வாணிப கிடங்கு அலுவலகத்தில் 21ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடியில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 49 ஆயிரத்து 300 ரூபாய் சிக்கியது.இவை தவிரத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களிலும் தீபாவளி வரை இதுபோன்ற தொடர் அதிரடி சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.