உயரும் நீர்மட்டம்... மகிழ்ச்சியில் மக்கள்
சென்னையில் பெய்த கனமழையைத் தொடந்து, நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
கடந்த கோடைகாலத்தில் தமிழகம் முழுவதும் வெய்யில் சுட்டெரித்தது. இதைத் தொடர்ந்து கடுமையான வறட்சி நிலவியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விளைபயிர்கள் காய்ந்தன. மக்கள் பேதிய குடிநீர் இன்றி தவித்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு பருவமழை தமிழகம் முழுவதும் மகிழ்ச்சிதரும் வகையில், பரவலாகப் பெய்துருகின்றது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாக இருக்கும் பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏர், புழல் ஏரி, போரூர் ஏரி உள்ளிட்டவைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.