`இதை வைத்து ஸ்மித்தை எடை போடக்கூடாது! ரோகித் ஷர்மா ஆதரவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் பந்தை விதிகளுக்குப் புறம்பாக சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்மித்தின் நிலை குறித்து பரிதாபப்பட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா. ஸ்மித் குறித்து ஷர்மா, `சமீபத்தில் தென்னாப்பிரிக்க விமான நிலையத்தில் இருந்து ஸ்மித் அழைத்து செல்லப்பட்ட விதமும், அவரின் செய்தியாளர் சந்திப்பும் இன்னும் என்னுள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில் அவர்கள் தவறு செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு சரியா, தவறா என்பது குறித்து நான் கருத்து கூற முடியாது. அதே வேளையில், கிரிக்கெட்டின் ஒழுங்குத்தன்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள். எனவே, இந்த ஒரு சம்பவம் அவர்களைப் பற்றி விவரிக்க பயன்படுத்தப்படக் கூடாது’ என்று ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளார்.

ஸ்மித் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். அப்போது அவர், `நான் தெரியாமல் இந்தத் தவறை செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என்று திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>