முகக்கவசம் ஏன் அணிய வேண்டும்?? அதனின் பயன் என்ன??

முன்பெல்லாம் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் முகக்கவசத்தை அணிவார்கள். ஆனால் நமக்கு வந்த சோதனையை பாருங்க... முக கவசம் அணிந்தால் மட்டுமே வெளியே போகும் சூழலில் மாட்டி கொண்டோம். முதலில் சீனாவில் தொடங்கி படி படியாக அனைத்து நாடுகளுக்கு அழையா விருந்தாளியாய் சென்று பல லட்ச மக்களை கொன்றுவிட்டது. இதனின் விளைவுகள் இன்னும் குறைந்தபாடில்லை.நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது. இது பற்றி பல விமர்சனங்கள் நாம் சமூக வலைத்தளங்களில் பார்த்துக்கொண்டு வருகிறோம்.

முக உறையைப் பற்றி, பல விமர்சனங்கள், பல சங்கடங்கள், பல அசௌகரியங்கள் என பல பேர் கூறவதைக் கேட்டிருக்கிறோம். அசௌகரியம் கண்டிப்பாக இருக்கத்தான் செய்கிறது. வீட்டில் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் முக உறை தேவையில்லை. ஆனால் வெளியில் கண்டிப்பாக தேவை.

நிறையப் பேர் வண்டியில் செல்லும் போது, அலுவலகத்தில் வேலை செய்யும் போது, வணக்கம் சொல்லும் போதும் என எல்லா நேரமும் முக உறையுடன் இருப்பர் ஆனால் ஏதாவது பேசும்போது கீழே இறங்கி விட்டுப் பேசுவர். இதனால் இவ்வளவு நேரம் முக உறை போட்டதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். முக உறை இன்றி அருகில் நின்று பேசும் போது ஒன்னரை அடி தூரம் வரை நம் மூச்சிக்காற்றின் ஈரப்பதத்துடன் கூடிய மிக நுண்ணிய வைரஸ் கிருமிகள் மிக வேகமாக வெளியேறும். அந்த நேரம் காற்று அதிகமாக இருந்தால் 6 அடி 7 அடி வரை மிக வேகமாக வைரஸ் வெளியேறும்.

எனவே எந்த சூழ்நிலையிலும் எந்த வேளையிலும் கண்டிப்பாக முக உறையை கழட்டாதீர்கள். பில்டர் வைத்த முக உறைகள் போடக்கூடாது என இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.. இதனால் எந்த பயனும் இல்லை. சாதாரண துணி முக கவசமே போதுமானது.

நம் அருகே உள்ள நாடுகளான ஜப்பான், தைவான், தென் கொரியா போன்ற நாடுகளில் இவ்வளவு தூரம் நோய் வராமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் முறையாகக் கடைபிடிக்கும் மூன்று ஒழுக்கங்களே. முக உறை, கை கழுவுதல், தனித்திருத்தல் ஆகியவையாகும்.

கடந்த 6 மாத காலமாக கண்டிப்பான முறையில் இவற்றைக் கடைபிடிக்கின்றார்கள். உடலில் சட்டை அணிந்து செல்வது எவ்வளவு அவசியமோ அதைப் போன்று முக உறை அனிவதை அவசியமாக எண்ண வேண்டும். நாம் அனைவரும் நம் நலம், பிறர் நலம் கருதி கண்டிப்பாக இவற்றைக் கடைபிடிப்போம்.

More News >>