இன்ஸ்டாகிராம் கேள்வியால் மரண தண்டனை?!.. ஒலிம்பிக் வீரருக்கு துயரம்
ஈரான் நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பளு தூக்கும் வீரர் ரேஸா தப்ரிஸி. இவர் பாடிபில்டரும்கூட. 2011 நியூசிலாந்து பாரா ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். இதற்கிடையே, கொரோனா லாக் டவுனால் ஜிம் உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புனித நகரமான மஷாத்தில் உள்ள வழிபாட்டு தலங்களையும், அதற்கு பக்தர்கள் செல்லும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார். கூடவே, வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஜிம்களை மூடுவது வேடிக்கையானது" என்றும் பதிவிட்டார்.
இது சர்ச்சையை ஏற்படுத்த, சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட குற்றத்தின் பேரில் ஈரான் போலீஸார் திடீரென தப்ரிஸியை கைது செய்தனர். கைது நடவடிக்கையை அடுத்து தனது கருத்தை திரும்ப பெற்றதுடன், மன்னிப்பும் கோரினார் தப்ரிஸி. ஆனாலும் அவர் மீது நடவடிக்கை பாய இருக்கிறது. அவருக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படமால் எனக் கூறப்படுகிறது. கருத்து தெரிவித்ததாக மரண தண்டனை விதிக்கப்பட இருக்கிற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.