தோனி அண்ட் கோ-வின் காலா டீஸர் வெர்ஷன் இதோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி, முரளி விஜய், பிராவோ நடிப்பில் காலா வெர்ஷன் தற்போது வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் நடித்து பா. ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் காலா. இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்த் உடன் ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டில், நானா படேகர், சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். இசைப் பணியை ரஞ்சித் படத்திற்கு தொடர்ந்து இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் ஏற்றுள்ளார். இந்நிலையில், படத்தில் டீஸர் நேற்று மார்ச் 2ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு களம் இறங்குகிறது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், ‘தல தோனி அண்ட் கோ’வின் காலா வெர்ஷன் வெளியாகியுள்ளது.
வீடியோ இங்கே:
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com