போரூர் முருகன் கோவிலில் பங்குனி உத்தரம் திருவிழா

போரூர் முருகன் கோவிலில் இன்று நடைபெற்ற பங்குனி உத்தரம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் தூக்கி வந்து கலந்துக் கொண்டனர்.

சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாக பங்குனி உத்தரம் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். இன்றைய தினத்தில் ஏராளமாக முருகன் பக்தர்கள் விரதம் இருந்து வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.

அந்த வகையில், போரூரில் பிரசிதிப்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு இன்று, பங்குனி மாதம் உத்தரம் திருவிழா நடைபெற்றது. இதில், கலந்துக் கொண்ட ஏராளமான பக்தர்கள் பால் குடம் தூக்கியும், அலகு குத்தியும், காவடி ஏந்தியும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

குறிப்பாக, சிறுவர்கள் உடல் முழுவதும் திருநீர் பூசிக்கொண்டு அலகு குத்தி முருகன் போன்று வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர்.

மேலும், முருகனின் திருவுருவச்சிலையை கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் மேலத்தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்றனர். வழி எங்கும் சூழ்ந்த பக்தர்கள், முருகனுக்கு ஆரத்தி எடுத்து பூஜை செய்தனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>