இல்லத்தரசிகளுக்கு அடித்த தீபாவளி ஜாக்பாட்! தொடரும் தங்கத்தின் விலை வீழ்ச்சி! 12-11-2020
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கியது தங்கத்தின் விலை. இந்த மாதத்தில் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் உள்ளதால் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் கூறினர். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் நேரடி வாக்குப்பதிவு முடிந்து ஜோபைடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, உலக சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே சந்தையின் தொடக்கத்தில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
தீபாவளி நெருங்குவதால் இந்த வாரம் தங்கத்தின் விலையில் பெரிய அளவு மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தங்கத்தையும் விட்டு வைக்கவில்லை. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியால் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. மேலும் இந்த மாதத்தின் இறுதிக்குள் தங்கத்தின் விலை 37000 கீழ் செல்லவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4764 க்கு விற்பனையானது. ஆனால் சந்தையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.12 குறைந்து, கிராமானது ரூ 4752 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் - 47528 கிராம் ( 1 சவரன் ) - 38016
தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5144 க்கு விற்பனையானது. தூய தங்கத்தின் விலையானது இன்று கிராமிற்கு ரூ. 12 விலை குறைந்து, கிராமானது 5132 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 51328 கிராம் - 41056
வெள்ளியின் விலை
தங்கத்தின் விலை உயரும்போது, வெள்ளியின் விலை குறையத் தொடங்கும் ஆனால் பண்டிகை தினங்கள் நெருங்குவதால், வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் கிராமிற்கு ரூபாய் 10 பைசா உயர்ந்து, கிராம் 67 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 67000 க்கு விற்பனையாகிறது.