உங்கள் கூகுள் அக்கவுண்ட் அழிக்கப்படலாம்: புதிய விதி வருகிறது
பயனர்கள் கணக்கு குறித்த புதிய கொள்கை முடிவுகளைக் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி பயன்படுத்தப்படாத கணக்குகளில் உள்ள ஃபைல்கள், படங்கள், ஃபோட்டோக்கள் அழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிமெயில், கூகுள் டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைடு, டிராயிங்ஸ், ஃபார்ம்ஸ் ஆகியவற்றைக் கொண்ட டிரைவ் இவற்றுக்கு புதிய விதி பொருந்தும்.
வரும் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் அறிமுகமாக இருக்கும் புதிய கொள்கை முடிவின்படி தொடர்ந்து இரண்டாண்டுகள் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்கு மற்றும் சேமிப்பு அளவு முடிந்துள்ள கணக்குகளில் உள்ள சேகரிப்புகள் அழிக்கப்படும். 3 முதல் 18 மாதம் வரை பயன்படுத்தப்படாத கணக்குகள் குறித்து (Inactive Account Manager) நினைவுறுத்தல்கள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லாத 15 ஜிபி சேமிப்பளவுக்கு முடிந்துபோனவர்கள் கூகுள் ஒன் திட்டத்தின்படி அதிக அளவுள்ள திட்டத்தைத் தெரிவு செய்யலாம். 100 ஜிபி சேமிப்பளவில் தொடங்கும் பல்வேறு திட்டங்கள் இருப்பதாகவும் கூடுதல் பயனர்கள் பயன்படுத்தும்படி கூகுள் எக்ஸ்பர்ட்ஸ் மற்றும் குடும்பத்திற்கான திட்டங்களும் உள்ளன என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.