ஜெயில் சாப்பாடு சாப்பிட ஆசை: வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

நேற்றிரவு ஈரோடு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் ஈரோடு ரயில்நிலையம், மணிக்கூண்டு உள்ளிட்ட 10 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். அவர் பேசிய செல்போன் எண்ணை கொண்டு விசாரணை நடத்திய போலீசார், ஈரோடு ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடத்தில் இருந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ஜெயிலுக்கு செல்லும் ஆசையில் இப்படி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

சந்தோஷ்குமாருக்கு இரண்டு மனைவிகள் உண்டாம். இரண்டு பெருமையா அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனராம் இதனால் சாப்பாட்டிற்கே சிரமப்பட்டு உள்ளதாகவும் சிரமப்பட்டு வந்ததால் ஜெயிலுக்கு சென்றால் உணவு கிடைக்கும் என்ற ஆசையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சொல்லியிருக்கிறார். ஏற்கனவே இரண்டு முறை இதே போல் உணவுக்காக ஜெயிலுக்கு செல்ல வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதானவர் இந்த சந்தோஷ் குமார்..

More News >>