ஸ்மித்தை குற்றவாளி போல் நடத்துவதா? - ஸ்டெய்ன், பீட்டர்சன் உருக்கம்
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அடிபட்ட ஸ்டீவ் ஸ்மித்துக்கு வழங்கப்பட்ட தண்டனை அதிகப்பட்சமானது என்று கிரிக்கெட் வீரர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேங்க்ராஃப்ட் பந்தை விதிகளுக்குப் புறம்பாக சேதப்படுத்தியது அம்பலமானது. இந்த சம்பவத்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலியா பிரதமர் உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்தனர்.
இது குறித்து விசாரித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஸ்மித், வார்னர் இருவரும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஓராண்டு தடை விதித்தது. மேலும், அடுத்த இரு ஆண்டுகளுக்கு இவர்கள் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக செயல்படவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் தாயகம் திரும்பிய ஸ்டீவ் ஸ்மித்தை ஜோகன்னஸ்பர்க் விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் குற்றவாளியைப் போல் இழுத்து சென்றனர். இது கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், “ஆஸ்திரேலிய ரசிகர்களால் ஸ்மித் தாக்கப்படலாம் எனக்கூறி பாதுகாப்புக்காக அழைத்து சென்றதாக விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பாதுகாப்புக்கு என்றாலும் ஸ்மித்தை குற்றவாளியைப் போல நடத்தியது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன், “ஓ... ஆஸ்திரேலியா வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை மிக அதிகமானது. சரி எல்லாம் முடிந்துவிட்டது. இதுவும் வாழ்க்கையை மாற்றுவதற்கான பொருள் தான். ஆனால், விமான நிலையத்தில் ஸ்மித்தை நடத்தப்பட்ட விதம் தேவையற்றது” என்று தெரிவித்துள்ளார்.
வீடியோ இங்கே:
நன்றி : CricTalks
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com