பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது கொள்ளுக்குடிப்பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் பறவைகள் சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் 45 ஆண்டு காலமாக ஜூலை மாதத்தில் வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து மார்ச் மாதம் வெளிநாடுகளுக்கு திரும்புவது வழக்கம். இந்த பறவைகள் வந்தது முதல் கொள்ளுக்குடிப்பட்டி கிராம மக்கள் பறவைகளை தங்கள் குழந்தைகள் போல் பாதுகாத்து வருகின்றனர். இந்தப் பறவைகளுக்கு இடையூறு ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இக்கிராம மக்கள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிப்பதில்லை தீபாவளிக்கு வெடிகளை வெடிப்பது இல்லை.
இந்த முடிவை இன்றளவும் கடைபிடிக்கின்றனர். பறவைகளுக்காக திருமணம், திருவிழா மற்றும் துக்க நிகழ்வுகளிலும் வெடி வெடிக்க தடையுள்ளது. இந்த கொள்கையில் தீவிரமாக இருக்கும் கிராம மக்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்திற்கு வந்து பாராட்டி தீபாவளி இனிப்புகள் வழங்கி சென்றிருக்கிறார். பறவைகளுக்காக பட்டாசு வெடிப்பதில்லை என்ற கொள்கையோடு வாழும் கொள்ளுக்குடிப்பட்டிகிராம மக்கள் மனித நேயம் மிக்கவர்களே.