தாய்லாந்து மக்களை சோகத்தில் ஆழ்த்திய என்கா சன் யானை... என்ன காரணம்?!

யானைகள் அதிகம் வாழும் நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று. அந்நாட்டின் தேசிய விலங்காக யானை திகழ்கிறது. தாய்லாந்து நாட்டில் 2000 மேற்பட்ட யானைகள் காட்டு பகுதிகளில் வசித்து வருகிறது சமீபத்திய கணக்கெடுப்பு. இதுபோக வளர்ப்பு யானைகள் வேற உள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் தாய்லாந்து நாட்டின் ரேயாங் மாகாணத்தில் என்கா சன் என்ற பெயருடைய யானை ஒன்று பார்பபதற்கே மோசமான நிலையில் உடல் நிலை குன்றி மயக்கமடைந்த நிலையில் தோப்பு ஒன்றில் மீட்கப்பட்டது. உடனடியாக வனவிலங்கு மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அளிக்க வந்தனா். யானையின் உடலை சோதனை செய்த போது 15 இடங்களுக்கு மேல் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இருப்பதை கண்டனா். மேலும் முன்னங்கால், நுரையீரல்கள், இருதயம்,பின்புறம், வால்,மற்றும் குடல்கள் என உடலின் அனைத்து பகுதிகளிலும் குண்டுகள் பாய்ந்து இருந்தது. இதனை பாா்த்த மருத்துவா்கள் வேதனை அடைந்தனா். யானையை மீட்ட மருத்துவர்கள் ஒரு மாத காலமாக சிகிச்சை அளித்து வந்தனர். யானையின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து என்கா சன் யானையை மீண்டும் வனப்பகுதியில் விட்டனர்,

ஆனால் காட்டிற்குள் விட்ட சில தினங்களிலேயே யானைக்கு மீண்டும் ஒரு துயரம் நிகழ்ந்தது. சேறு நிறைந்த குளம் ஒன்றில் மயக்கமடைந்த நிலையில் யானை மீண்டும் விழுந்துகிடப்பதை அறிந்து வனத்துறையினா் மீட்டனா். இரண்டு நாட்களாக சேற்றில் கிடந்ததால் யானையின் உடல் வெப்ப நிலை மிகவும் குறைந்தே இருந்ததது. மருத்துவர்கள் யானையை காப்பாற்ற போராடினர். ஆனால் மருத்துவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியை அடைய யானை உயிரிழந்தது.

தாய்லாந்து ஊடகங்களில் யானை உயிரிழந்த சோகமான பதிவுகளை வெளியிட்டனா். இந்த செய்தி தாய்லாந்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. யானைக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூடினா்.அதனால் அந்த இடமே சோக வெள்ளத்தில் முழ்கியது போல் தோற்றமளித்தது. பலரும் என்கா சன் யானையின் புகைப்படங்களை பதிவிட்டு வேதனை தெரிவித்து வருகின்றனர்.

More News >>