சிறை பாத்ரூமிலும் கேமரா... நவாஸ் ஷெரிப் மகளை டார்ச்சர் செய்த இம்ரான் அரசு?!

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறைக்கு சென்ற அவர் உடல்நலக்குறைவால் ஜாமீன் பெற்று தற்போது லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. நவாஸை போலவே, அவரின் மகள் மரியம் ஷெரிப் இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, ஜாமீனில் வெளிவந்திருக்கும் மரியம், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது இம்ரான் அரசு தன்னை சிறையில் வைத்து கடுமையாக சித்ரவதைகள் செய்த்தாக குற்றம் சுமத்தியுள்ளார் மரியம். அதில், ``நான் இரண்டு முறை சிறை சென்றுவிட்டேன். ஒரு பெண்ணாக நான் சிறையில் அனுபவித்த சித்ரவதைகளைப் பேசினால் அவர்கள் யாரும் வெளியில் முகம் காண்பிக்க முடியாது. அதற்கு ஒரு உதாரணம். நான் தங்கியிருந்த சிறையின் அறையிலும், குளியலறையிலும் ரகசிய கேமராக்களை பொருத்தி இருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

More News >>