பத்தே நிமிடத்தில் ருசியான நீர் தோசை ரெசிபி..!
தோசையில் பொடி தோசை, மசாலா தோசை, ஸ்பெஷல் தோசை என பல வகை உண்டு. வெறும் இட்லி மாவு இருந்தால் போதுமானது. இதனை வைத்து பத்தே நிமிடத்தில் ருசியான தோசையை சாப்பிடலாம். அது மட்டும் இல்லாமல் இது ஒரு ஆரோக்கியமான உணவுகளும் ஒன்று. சரி வாங்க நீர் தோசையை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-பச்சரிசி - 1 கிலோதேங்காய் - 1உப்பு - தேவைக்கேற்பசர்க்கரை - இரண்டு ஸ்பூன்.
செய்முறை:-ஒரு பாத்திரத்தில் 1 கிலோ பச்சரிசியை எடுத்து சுமார் இரண்டு மணி ஊற வைக்கவும். பிறகு அரிசியோடு தேங்காய் சேர்த்து மாவு பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும்.
அரைத்த மாவை வேறொரு கிண்ணத்தில் மாற்றி அதில் சர்க்கரை, உப்பு,தண்ணீர் ஆகியவை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். அடுப்பில் தவாவை வைத்து அதில் தோசை மாவை ஊற்றவும்.
இரண்டு பக்கம் பொன்னிறமாக ஆகும் வரை வேக வைக்கவும்.பிறகு தோசையை எடுத்து பரிமாறலாம். இதற்கு கார சட்னியை வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்..