குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்!.. ஸ்டாலின் டுவீட்

இன்று முன்னாள் பாரத பிரதமர் நேருவின் பிறந்தநாள். இன்றைய நாளை குழைந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். இந்த தினத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து இன்றைய நாளில் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவீட் பதிவில், ``மக்கள் நலனை உள்ளடக்கிய தேசநலனில் அக்கறை செலுத்திய பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளே குழந்தைகள் தினம். இன்றைய தினத்தில் குழந்தையர் நலன் காப்போம்! குழந்தையர் உரிமைக்கு முக்கியத்துவம் தருவோம்! அனைவர்க்கும் அடிப்படைக் கல்வி என்ற இலக்கை எட்டி குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்!" எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர். அனைத்து குழந்தை செல்வங்களுக்கும், அவர்களை நாட்டின் வருங்கால தூண்களாக செம்மைப்படுத்தும் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More News >>