ஹாலிவுட் நட்சத்திரம் அர்னால்டுக்கு இருதய அறுவை சிகிச்சை

ஹாலிவுட் நட்சத்திரம் ஆர்னால்டு ஸ்வாஷ்வனேகருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது உடல் நலத்தோடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக ஆணழகர் பட்டம் வாங்கியவரும் பல ஹாலிவுட் அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்தவருமான அர்னால்டுக்கு தற்போது 70 வயது ஆகிறது. அவருக்கு 1997-ம் ஆண்டே இருதய கோளாறு ஏற்பட்டது. அப்போது சிறிய நிலை அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது.

பிறகு உடல் நலத்தோடு திரைப்படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக, 2003-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு 1997-ம் ஆண்டு செய்த அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மருத்தவர்களின் ஆலோசனைபடி அவர், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது அவர் உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>