தேசிய நெடுஞ்சாலையில் பயணமா..? இனி கூடுதலாகப் படியளக்க வேண்டும்!
தேசிய நெடுஞ்சாலைகளில் இனி டோல்கேட் கட்டணம் இரண்டு சதவிகிதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கட்டணம் வருகிற ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து 5சதவிகிதத்திலிருந்து 7சதவிகிதமாக உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரலாம் என லாரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் மொத்தமாக உள்ள 372 தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கான கட்டணம் 7 சதவிகிதமாக உயரும் என்றும் என்.ஹெச்-2 உள்ளிட்ட இதர டோல்கேட் கட்டணங்கள் 5 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிதியாண்டு தொடங்கும் போதும் டோல்கேட் கட்டணங்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். இதையடுத்துதான் தற்போது டோல்கேட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com