திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் கந்தசஷ்டி திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலக அளவிலிருந்து பக்தர்கள் வந்து விரதமிருப்பது வழக்கம். அப்படி புகழ்பெற்ற கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் து வங்கியது. இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கந்தசஷ்டி விழாவில் விரதமிருக்க அனுமதியளிக்கப்படவில்லை. ஊரடங்கு அமலில் உள்ளதால் அறநிலையத்துறை ஆணையரால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நடத்தப்பட உள்ளது.

இத்திருவிழா இன்று துவங்கி வரும் 26ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. 20ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. திருவிழா நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி. சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண விழாவை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற நாட்களில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வபக்தர்கள் இந்த ஆண்டு சஷ்டி விரதததை தங்கள் வீடுகளிலேயே அனுஷ்டிக்க வேண்டும். கோயிலில் விரதமிருக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. அகே போல கோயில் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கவும் அனுமதியில்லை. கோயில் வளாகத்தில் மாலை 6 மணிக்கு மேல் இருப்பதற்குஅனுமதியில்லை. கோயில் விடுதி அறைகள் வாடகைக்கு விடபடமாட்டாது.

சஷ்டி விழாவில் மாலையில் சுவாமி சுவாமி ஜெயந்தி நாதர் கிரி பிரகார உலா இந்தாண்டு நிறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் கடல் மற்றும் நாழிகிணற்றில் நீராட அனுமதியில்லை. பக்தர்கள் தேங்காய், பழம், மாலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வர அனுமதியில்லை. காது குத்த அனுமதியில்லை. பக்தர்களுக்கு அன்னதானம் கோயில் மூலம் பொட்டலங்களாக வழங்கப்படும்.

திருவிழா நாட்களில் அனைத்து நிகழ்வுகளையும் வரும் 15ம் தேதி முதல் வரும் 19ம் தேதி வரை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை யாகசாலை பூஜை மற்றும் மாலை 4 மணி முதல் மாலை 4.30 மணி வரை சுவாமி ஜெயந்திநாதர் அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை, சூரசம்ஹாரம் நடக்கும் 20ம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கும் சுவாமி ஜெயந்திநாதர் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்வு, 21ம் தேதி மாலை 6 மணிக்கு மாலை மாற்றுதல், இரவு 11 மணி திருக்கல்யாண நிகழ்ச்சி ஆகியவை https://www.youtupe.com/channel/UCDiavBtRKe0xv1FYVupEw/live என்ற வலைதள நேரலையில் ஒளிப்பரப்பபடும். என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

More News >>