ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது.. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்ட வட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. தூத்துக்குடி உள்ள ஸ்டெர்லைட் தாமிரா உருக்காலையால் சுற்றுப்புறப் பகுதிகளில் காற்றுமாசு படுவதாகவும், இதனால் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். 2018ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த மிகப்பெரிய ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது . இதைத் தொடர்ந்து கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடி முத்திரையிடப்பட்டது.
இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையைத் மீண்டும் திறக்க அனுமதி கோரி ஆலை நரிவாகம் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு அளித்துள்ள பதில் மனுவில், இடைக்கால நட டிக்கையாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேதாந்தா நிறுவனம் அனுமதி கோர எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.