தலை இல்லாமல் ஏழு நாட்கள் உயிர் வாழ்ந்த அதிசய கோழி!

தாய்லாந்தில் தலை இல்லாமல் ஏழு நாட்கள் கோழி ஒன்று உயிர் வாழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும், அதன் தலையை வெட்டிவிட்டால் உடனே இறந்துவிடும். இது தவிர்க்க முடியாயது; இதுதான் இயற்கை. ஆனால், சில நேரங்களில் இயற்கையையும் தாண்டி விந்தைகள் ஏற்படுகின்றன.

அப்படித்தான், தாய்லாந்தை சேர்ந்த ‘நோப்போங் தித்தாம்மோ’ என்ற பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் தலையில்லா கோழி ஒன்று உயிருடன் நடமாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அதில் கோழியின் கழுத்துப்பகுதி வழியாக திரவ உணவுகளை வழங்குவதாலும், நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்குவதாலும் உயிர் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தவிர அந்த கோழி களைப்பாக இருந்ததாகவும், நன்றாக உணவருந்தியதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், ‘அந்த கோழி உயிருடன் தான் இருந்தது; இது உயிர்வாழ விரும்பினால், அதற்கு உணவிட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

அந்த கோழியை வேறு ஏதோ தாக்கி கழுத்தை துண்டித்துள்ளது. கோழியின் நாக்கு அறுபட்டு விழுந்ததும் அது கீழே விழுந்து இறந்துவிடும் என்று பயந்ததாகவும், ஆனால் அது ஒரு வார காலம் உயிர்வாழ்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>