அமெரிக்காவில் இருந்து இரண்டாம் தடுப்பூசி... 95 சதவீதம் வெற்றி என அறிவிப்பு!

கொரோனாவுக்கு எதிரான தங்கள் நிறுவனத்தின் தடுப்பு மருந்து 90 சதவிகிதம் வெற்றிபெற்றுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த pfizer சமீபத்தில் தெரிவித்தது. கொரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்து 90% மக்களுக்கு அந்நோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டவர்களில் யாருக்கும் இதுவரை பாதுகாப்பு பிரச்னை எழவில்லை. 6 நாடுகளில் 43,500 பேருக்கு இம்மருந்து செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இம்மருந்து விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பை அடுத்து இங்கிலாந்து அரசு முதல்கட்டமாக 1 கோடி டோஸ்களை வாங்க இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இதே அமெரிக்காவில் இருந்து இன்னொரு நிறுவனத்தின் தடுப்பூசி 95 சதவீதம் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான மாடர்னா இந்த புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக கிட்டதட்ட 95 சதவீத அளவிற்குப் பலனளிக்கக்கூடியதாக இந்த புதிய தடுப்பூசி அமைந்துள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்த தடுப்பு மருந்தைப் பயன்படுத்தும் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது கூடுதல் சந்தோசத்தை தரும் செய்தியாக அமைந்துள்ளன.

More News >>