விளம்பர வருமானம் ரூ.2400 கோடி.. ஆனாலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வருத்தம்!

2020 ஐபிஎல் சீசன் போட்டிகளால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஈர்த்துள்ள வருமானம் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன. இந்த, ஐபிஎல் சீசன் மூலம், 2400 கோடி ரூபாய் வரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிகிறது. தொலைக்காட்சி விளம்பரம் மூலம் 2250 கோடியும், ஹாட்ஸ்டார் விளம்பரங்கள் மூலம் 200 முதல் 250 கோடியும் வருவாய்யை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வருவாய் ஈட்டியுள்ளது. முன்பை விட இந்த வருமானம் அதிகம் என்றாலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பில் வருத்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேசியுள்ள பொருளாதார வல்லுநர்கள், ``கொரோனா லாக் டவுன் காரணமாக ஐபிஎல் போட்டிகளை முன் எப்போதும் இல்லாத அளவு ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர். அதிலும் ஹாட் ஸ்டார் மூலம் போட்டியை ரசிகர்கள் ரசித்துள்ளனர். பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததை வைத்து கணக்கிட்டால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு வருமானம் ஒற்றை இலக்க சதவீதத்தில் தான் அதிகரித்துள்ளது. 85 சதவீத விளம்பரங்கள் ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு ஒப்பந்தங்கள் செய்திருந்தால் இன்னும் கூடுதல் வருமானம் கிடைத்திருக்கும். இதனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வருத்தத்தில் இருக்கிறது" என்று கூறியுள்ளனர்.

More News >>